தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3663

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37

உஹுதுப் போர்.

 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போர் நாளில் (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் எழுவரும் குறைஷியரில் (முஹாஜிர்களில்) இருவரும் மட்டுமே தம்முடனிருக்க தனித்து விடப்பட்டார்கள். (மற்ற தோழர்கள் சிதறி ஓடிவிட்டனர்.)

இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கிய போது, “நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? “அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்”; அல்லது “அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்”என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் முன்னேறிச் சென்று போரிட்டார். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கினார்கள். அப்போது “நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? “அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்”; அல்லது “அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்” என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் மற்றொரு மனிதர் முன்னேறிச் சென்று எதிரிகளுடன் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டார். இவ்வாறே (ஒருவர் பின் ஒருவராகச்) சென்று அன்சாரிகள் எழுவரும் கொல்லப்பட்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடனிருந்த) தம்மிரு (குறைஷித்) தோழர்களிடம், “நாம் நம்முடைய (அன்சாரித்) தோழர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வில்லை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 32

(முஸ்லிம்: 3663)

37 – بَابُ غَزْوَةِ أُحُدٍ

وحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنَ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ، فَلَمَّا رَهِقُوهُ، قَالَ: «مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ؟» – أَوْ «هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ» -، فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ، ثُمَّ رَهِقُوهُ أَيْضًا، فَقَالَ: «مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ؟ -» أَوْ «هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ» -، فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ، فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ: «مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا»


Tamil-3663
Shamila-1789
JawamiulKalim-3350




இந்தக் கருத்தில் அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-12220 , 12538 , 13649 , 14056 , முஸ்லிம்-3586 , 3663 , இப்னு ஹிப்பான்-4718 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.