பாடம் : 35
(அறப்போரில் கலந்துகொண்ட) இருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்று விடுகிறார். பிறகு அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர் (அது எவ்வாறு?) என்பது பற்றிய விளக்கம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ், இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழையவும் செய்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர்.
அதற்கு, “இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, வீரமரணம் அடைந்துவிடுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் இஸ்லாத்தை ஏற்று பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அல்லாஹ் அவரை மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த்தியாகி ஆகிவிடுகிறார் (எனவே இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர்)” என்று பதிலளித்தார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 33
(முஸ்லிம்: 3841)35 – بَابُ بَيَانِ الرَّجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الْآخَرَ يَدْخُلَانِ الْجَنَّةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«يَضْحَكُ اللهُ إِلَى رَجُلَيْنِ، يَقْتُلُ أَحَدُهُمَا الْآخَرَ كِلَاهُمَا يَدْخُلُ الْجَنَّةَ»، فَقَالُوا: كَيْفَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ فَيُسْتَشْهَدُ، ثُمَّ يَتُوبُ اللهُ عَلَى الْقَاتِلِ، فَيُسْلِمُ، فَيُقَاتِلُ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ فَيُسْتَشْهَدُ»
– وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ، قَالُوا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ
Tamil-3841
Shamila-1890
JawamiulKalim-3511
சமீப விமர்சனங்கள்