அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள்.
மேலும், “இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக்கூடியதும்; (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும்; அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்” என்று கூறினார்கள்.
ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “பாத்திரத்தில் (பருகும்போது)” என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம்: 36
(முஸ்லிம்: 4126)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، ح وحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي عِصَامٍ، عَنْ أَنَسٍ، قَالَ
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا، وَيَقُولُ: «إِنَّهُ أَرْوَى وَأَبْرَأُ وَأَمْرَأُ»، قَالَ أَنَسٌ: «فَأَنَا أَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا»
– وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ أَبِي عِصَامٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، وَقَالَ: فِي الْإِنَاءِ
Muslim-Tamil-4126.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2028.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3789.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஇஸாம் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்லிம்-4126 , அபூதாவூத்-, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- ஸுமாமா பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-5631 , முஸ்லிம்-4125 , இப்னு மாஜா-, திர்மிதீ-, முஸ்லிம்-, குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,
- வர்காஃ பின் உமர் —> அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-,
- ஸாலிஹ் பின் பஷீர் —> அப்துல்மலிக் பின் ஹபீப் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-153 ,
சமீப விமர்சனங்கள்