தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4146

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள் உணவு தயாரித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக என்னை அனுப்பினார்கள். நான் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்த போது நான் கூச்சப்பட்டேன். நான், “அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தங்களை விருந்துண்ண அழைக்கிறார்கள். அந்த) அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த) மக்களிடம், “எழுந்திருங்கள்” என்று சொன்னார்கள். பிறகு (அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தபோது) “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு மட்டுமே நான் சிறிதளவு (உணவு) தயாரித்துள்ளேன்” என்று அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த உணவைத் தொட்டு, அதில் பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு, “என் தோழர்களில் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்” என்று கூறினார்கள். (அவர்கள் உள்ளே வந்ததும்) “உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, தம் விரல்களுக்கிடையிலிருந்து எதையோ வெளியாக்கினார்கள். உள்ளே வந்தவர்கள் வயிறார உண்டுவிட்டு வெளியேறிச் சென்றனர். பிறகு “இன்னும் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்”என்று கூறினார்கள். அவர்களும் வந்து வயிறார உண்டனர்.

இவ்வாறே பத்துப் பேர் உள்ளே வர, பத்துப் பேர் வெளியே போக அவர்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அனைவரும் உள்ளே வந்து வயிறார உண்டனர். பிறகு எஞ்சியிருந்த உணவை ஒருங்கிணைத்துப் பார்த்தபோது, அவர்கள் சாப்பிட்டபோது இருந்த அதே அளவில் (சிறிதும் குறையாமல்) அது இருந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன. இறுதியில் “பிறகு எஞ்சியிருந்த உணவை எடுத்து ஒன்றுசேர்த்து அதில் பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள். அது முன்பிருந்ததைப் போன்றே மாறிவிட்டது. பிறகு “இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அபூதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுக்காக மட்டும் உணவு தயாரிக்கும் படி கூறிவிட்டு, என்னை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்” என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி தொடருகின்றன.

அதில், நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உணவின் மீது) வைத்து அல்லாஹ்வின் பெயர் கூறினார்கள். பிறகு (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) “பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்ததும் அவர்கள் (இல்லத்திற்குள்) நுழைந்தனர்.

அப்போது “அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உண்ணுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, அவ்வாறே அவர்கள் உண்டனர். இவ்வாறு எண்பது பேரிடமும் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் (அபூதல்ஹா (ரலி) அவர்களின்) வீட்டாரும் உண்டுவிட்டு, (மீதி) உணவையும் விட்டுச்சென்றனர் என்று இடம்பெற்றுள்ளது.

– அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளித்த இந்த நிகழ்ச்சி அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம்) வீட்டுவாசலில் நின்றுகொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிதளவே (உணவுப்) பொருள் இருக்கிறது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவாருங்கள். அதில் அல்லாஹ் வளத்தை ஏற்படுத்துவான்” என்று கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சாப்பிட்டு, வீட்டாரும் சாப்பிட்டு தங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுத்தனுப்பும் அளவுக்கு மீதி வைத்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் படுத்திருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் புரண்டு புரண்டு படுத்தார்கள். (இதைக் கண்ட) அபூ தல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் படுத்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பசியோடு இருப்பதாக நான் எண்ணுகிறேன்” என்று கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது.

மேலும் அதில் “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி) மற்றும் அனஸ் (ரலி) ஆகியோரும் உண்டனர். மீதி உணவும் இருந்தது. அதை நாங்கள் எங்கள் அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பாக வழங்கினோம்” என்று இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் பிறிதோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது:

நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வயிற்றில் ஒரு துணியைக் கட்டியிருந்தார்கள்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான உசாமா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் “கல்லை வைத்து ஒரு துணியால் கட்டியிருந்தார்கள் (என்று கூறியதாகவே) நான் சந்தேகத்துடன் கருதுகிறேன்” என்று கூறுகிறார்கள்-

உடனே நான் நபித்தோழர்கள் சிலரிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏன் தமது வயிற்றைத் துணியால் கட்டியிருக்கிறார்கள்?” என்று கேட்டேன். தோழர்கள், “பசியால்” என்று பதிலளித்தனர்.

ஆகவே, நான் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்று, – அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் பின்த் மில்ஹானின் கணவர் ஆவார் – “தந்தையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வயிற்றை ஒரு துணியால் கட்டியிருப்பதை நான் கண்டேன். எனவே, அவர்களுடைய தோழர்களில் சிலரிடம் (அதைப் பற்றிக்) கேட்டேன். அதற்கு “பசியால்தான்” என்று அவர்கள் பதிலளித்தனர் என்று சொன்னேன்.

உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் தாயாரிடம் சென்று “(உன்னிடம் உணவு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். என் தாயார் “ஆம். என்னிடம் சில ரொட்டித் துண்டுகளும் பேரீச்சம் பழங்களும் இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மட்டும் நம்மிடம் வந்தால் அவர்களுக்கு நம்மால் வயிறார உணவளிக்க முடியும். அவர்களுடன் வேறு யாரேனும் வந்தால் எல்லாருக்கும் போதாது…” என்று கூறினார். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு தொடருகின்றன.

– அபூதல்ஹா (ரலி) அவர்கள் அளித்த விருந்து தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் மேற்கண்ட ஹதீஸ்களில் காணப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Book : 36

(முஸ்லிம்: 4146)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ

بَعَثَنِي أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَدْعُوَهُ وَقَدْ جَعَلَ طَعَامًا، قَالَ: فَأَقْبَلْتُ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ النَّاسِ، فَنَظَرَ إِلَيَّ فَاسْتَحْيَيْتُ، فَقُلْتُ: أَجِبْ أَبَا طَلْحَةَ، فَقَالَ لِلنَّاسِ: «قُومُوا»، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا رَسُولَ اللهِ، إِنَّمَا صَنَعْتُ لَكَ شَيْئًا، قَالَ: فَمَسَّهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَعَا فِيهَا بِالْبَرَكَةِ، ثُمَّ قَالَ: «أَدْخِلْ نَفَرًا مِنْ أَصْحَابِي عَشَرَةً»، وَقَالَ: «كُلُوا»، وَأَخْرَجَ لَهُمْ شَيْئًا مِنْ بَيْنِ أَصَابِعِهِ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا فَخَرَجُوا، فَقَالَ: «أَدْخِلْ عَشَرَةً»، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، فَمَا زَالَ يُدْخِلُ عَشَرَةً وَيُخْرِجُ عَشَرَةً حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ أَحَدٌ إِلَّا دَخَلَ، فَأَكَلَ حَتَّى شَبِعَ، ثُمَّ هَيَّأَهَا فَإِذَا هِيَ مِثْلُهَا حِينَ أَكَلُوا مِنْهَا

– وحَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: بَعَثَنِي أَبُو طَلْحَةَ، إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ، غَيْرَ أَنَّهُ، قَالَ فِي آخِرِهِ: ثُمَّ أَخَذَ مَا بَقِيَ فَجَمَعَهُ، ثُمَّ دَعَا فِيهِ بِالْبَرَكَةِ، قَالَ: فَعَادَ كَمَا كَانَ، فَقَالَ: «دُونَكُمْ هَذَا»

– وحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: أَمَرَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ أَنْ تَصْنَعَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا لِنَفْسِهِ خَاصَّةً، ثُمَّ أَرْسَلَنِي إِلَيْهِ وَسَاقَ الْحَدِيثَ، وَقَالَ فِيهِ: فَوَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ وَسَمَّى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ»، فَأَذِنَ لَهُمْ فَدَخَلُوا، فَقَالَ: «كُلُوا وَسَمُّوا اللهَ»، فَأَكَلُوا حَتَّى فَعَلَ ذَلِكَ بِثَمَانِينَ رَجُلًا، ثُمَّ أَكَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ وَأَهْلُ الْبَيْتِ، وَتَرَكُوا سُؤْرًا

– وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، بِهَذِهِ الْقِصَّةِ فِي طَعَامِ أَبِي طَلْحَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ فِيهِ: فَقَامَ أَبُو طَلْحَةَ عَلَى الْبَابِ حَتَّى أَتَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: يَا رَسُولَ اللهِ، إِنَّمَا كَانَ شَيْءٌ يَسِيرٌ، قَالَ: «هَلُمَّهُ فَإِنَّ اللهَ سَيَجْعَلُ فِيهِ الْبَرَكَةَ»

– وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ الْبَجَلِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ، وَقَالَ فِيهِ: ثُمَّ أَكَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكَلَ أَهْلُ الْبَيْتِ، وَأَفْضَلُوا مَا أَبْلَغُوا جِيرَانَهُمْ

– وحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي،، قَالَ: سَمِعْتُ جَرِيرَ بْنَ زَيْدٍ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: رَأَى أَبُو طَلْحَةَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ، فَأَتَى أُمَّ سُلَيْمٍ، فَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ وَأَظُنُّهُ جَائِعًا وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ: ثُمَّ أَكَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو طَلْحَةَ، وَأُمُّ سُلَيْمٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ، وَفَضَلَتْ فَضْلَةٌ فَأَهْدَيْنَاهُ لِجِيرَانِنَا

– وحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ، أَنَّ يَعْقُوبَ بْنَ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيَّ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: جِئْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَوَجَدْتُهُ جَالِسًا مَعَ أَصْحَابِهِ يُحَدِّثُهُمْ، وَقَدْ عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ، قَالَ أُسَامَةُ: وَأَنَا أَشُكُّ عَلَى حَجَرٍ، فَقُلْتُ لِبَعْضِ أَصْحَابِهِ لِمَ عَصَّبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَطْنَهُ؟ فَقَالُوا: مِنَ الْجُوعِ، فَذَهَبْتُ إِلَى أَبِي طَلْحَةَ وَهُوَ زَوْجُ أُمِّ سُلَيْمٍ بِنْتِ مِلْحَانَ، فَقُلْتُ: يَا أَبَتَاهُ، قَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ، فَسَأَلْتُ بَعْضَ أَصْحَابِهِ، فَقَالُوا: مِنَ الْجُوعِ، فَدَخَلَ أَبُو طَلْحَةَ عَلَى أُمِّي، فَقَالَ: هَلْ مِنْ شَيْءٍ؟ فَقَالَتْ: نَعَمْ، عِنْدِي كِسَرٌ مِنْ خُبْزٍ وَتَمَرَاتٌ، فَإِنْ جَاءَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحْدَهُ أَشْبَعْنَاهُ، وَإِنْ جَاءَ آخَرُ مَعَهُ قَلَّ عَنْهُمْ، ثُمَّ ذَكَرَ سَائِرَ الْحَدِيثِ بِقِصَّتِهِ

– وحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَرْبُ بْنُ مَيْمُونٍ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَعَامِ أَبِي طَلْحَةَ نَحْوَ حَدِيثِهِمْ


Tamil-4146
Shamila-2040
JawamiulKalim-3809




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.