தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4256

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது இந்த விரலில் மோதிரம் அணியவேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள்” என்று கூறி, நடுவிரலையும் அதற்கடுத்த (ஆட்காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள்.

Book : 37

(முஸ்லிம்: 4256)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: قَالَ عَلِيٌّ

«نَهَانِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ هَذِهِ»، قَالَ: «فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا»


Muslim-Tamil-4256.
Muslim-TamilMisc-3910.
Muslim-Shamila-2095.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3918.




  • நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

1 . நடுவிரலையும், அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறிய செய்தி சில நூல்களில் வந்துள்ளது.

இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸில் கூறப்படவில்லை . இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

2 . கட்டை விரலிலும், சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபி  (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்றும் சில அறிவிப்பில் வருகிறது.

இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.

ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது. எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக ஆறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-586863 , 1019 , 1124 , 1168 , 1291 , 1321 , முஸ்லிம்-4255 , 4256 , இப்னு மாஜா-3648 , அபூதாவூத்-4225 , திர்மிதீ-1786 , நஸாயீ-5210 , 5211 , 5212 , 5286 , 5287 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.