தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4278

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நாயும் உருவச் சிலைகளும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன் என அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “இவர் (ஸைத் பின் காலித்), “நாயும் உருவச்சிலைகளும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் தெரிவிக்கிறாரே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், கூறினார்கள்: இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயல் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு நான் திரைச் சீலையொன்றை எடுத்து அதை (எனது வீட்டு) வாசலில் தொங்கவிட்டேன். அவர்கள் (போரை முடித்துத் திரும்பி) வந்தபோது அந்தத் திரைச் சீலையைப் பார்த்தார்கள். அவர்களது முகத்தில் அதிருப்தியை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேகமாக அதைப் பிடித்து இழுத்துக் கிழித்துவிட்டார்கள்.

மேலும், “அல்லாஹ், கல்லுக்கும் களி மண்ணுக்கும் ஆடையணிவிக்குமாறு நமக்குக் கட்டளையிடவில்லை” என்று கூறினார்கள். ஆகவே, அந்தத் திரையை நாங்கள் துண்டாக்கி, அவற்றில் பேரீச்ச நார்களை நிரப்பி, இரு தலையணைகள் செய்துகொண்டோம். அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.

Book : 37

(முஸ்லிம்: 4278)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَبِي الْحُبَابِ، مَوْلَى بَنِي النَّجَّارِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلَا تَمَاثِيلُ»

– قَالَ فَأَتَيْتُ عَائِشَةَ فَقُلْتُ: إِنَّ هَذَا يُخْبِرُنِي، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا تَمَاثِيلُ» فَهَلْ سَمِعْتِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ ذَلِكَ؟ فَقَالَتْ: لَا، وَلَكِنْ سَأُحَدِّثُكُمْ مَا رَأَيْتُهُ فَعَلَ، رَأَيْتُهُ خَرَجَ فِي غَزَاتِهِ، فَأَخَذْتُ نَمَطًا فَسَتَرْتُهُ عَلَى الْبَابِ، فَلَمَّا قَدِمَ فَرَأَى النَّمَطَ، عَرَفْتُ الْكَرَاهِيَةَ فِي وَجْهِهِ، فَجَذَبَهُ حَتَّى هَتَكَهُ أَوْ قَطَعَهُ، وَقَالَ: «إِنَّ اللهَ لَمْ يَأْمُرْنَا أَنْ نَكْسُوَ الْحِجَارَةَ وَالطِّينَ» قَالَتْ فَقَطَعْنَا مِنْهُ وِسَادَتَيْنِ وَحَشَوْتُهُمَا لِيفًا، فَلَمْ يَعِبْ ذَلِكَ عَلَيَّ


Tamil-4278
Shamila-2106
JawamiulKalim-3940




மேலும் பார்க்க: புகாரி-3226 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.