சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் “முன்திர்” என்பார் பிறந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள்.
அப்போது (குழந்தையின் தந்தை) அபூஉசைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். எதேச்சையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நிகழ்ந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. எனவே, அபூஉசைத் (ரலி) அவர்கள் தம் மகனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எடுத்துவருமாறு கூற, அவ்வாறே குழந்தையை அவர்களது மடியிலிருந்து எடுத்து, (வீட்டுக்குக்) கொடுத்தனுப்பி விட்டனர்.
சிறிது நேரத்தில் முந்தைய நிலைக்குத் திரும்பிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தக் குழந்தை எங்கே?”என்று கேட்டார்கள். அதற்கு அபூஉசைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! குழந்தையை (வீட்டுக்கு)க் கொடுத்தனுப்பிவிட்டோம்” என்று கூறினார்கள். அப்போது “அக்குழந்தையின் பெயரென்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, “இன்னது, அல்லாஹ்வின் தூதரே!” என அபூஉசைத் கூறினார்கள்.
(அப்பெயரை விரும்பாததால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, (இனி) அவர் பெயர் “முன்திர்” (எச்சரித்து நல்வழிப்படுத்துபவர்) ஆகும்” என்று கூறினார்கள். “முன்திர்” என்று அக்குழந்தைக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அன்றைக்குப் பெயர் சூட்டினார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 38
(முஸ்லிம்: 4347)حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ مُطَرِّفٍ أَبُو غَسَّانَ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ
أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ وُلِدَ فَوَضَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِهِ، وَأَبُو أُسَيْدٍ جَالِسٌ، فَلَهِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ بَيْنَ يَدَيْهِ، فَأَمَرَ أَبُو أُسَيْدٍ بِابْنِهِ فَاحْتُمِلَ مِنْ عَلَى فَخِذِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْلَبُوهُ، فَاسْتَفَاقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيْنَ الصَّبِيُّ» فَقَالَ: أَبُو أُسَيْدٍ أَقْلَبْنَاهُ، يَا رَسُولَ اللهِ. قَالَ: «مَا اسْمُهُ؟» قَالَ: فُلَانٌ، يَا رَسُولَ اللهِ قَالَ: «لَا، وَلَكِنِ اسْمُهُ الْمُنْذِرُ» فَسَمَّاهُ يَوْمَئِذٍ الْمُنْذِرَ
Tamil-4347
Shamila-2149
JawamiulKalim-4009
சமீப விமர்சனங்கள்