நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த ஒரு சிறுமியின் முகத்தில் படர்தாமரை இருப்பதைப் பார்த்துவிட்டு, “இவளுக்குக் கண்ணேறுபட்டிருக்கிறது. எனவே, இவளுக்கு ஓதிப்பாருங்கள்” என்று சொன்னார்கள். அதாவது அவள் முகத்தில் மஞ்சள் நிறத்தில் படர்தாமரை இருப்பதைக் கண்டார்கள்.
Book : 39
(முஸ்லிம்: 4422)حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِجَارِيَةٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَأَى بِوَجْهِهَا سَفْعَةً، فَقَالَ: «بِهَا نَظْرَةٌ، فَاسْتَرْقُوا لَهَا» يَعْنِي بِوَجْهِهَا صُفْرَةً
Tamil-4422
Shamila-2197
JawamiulKalim-4081
இது கண்ணேறு சும்பந்தமான ஹதீஸ் தானை.அப்படி என்றால் கண்ணேறு என்பது உண்மைதான் என்கின்ற செய்தி பதியப்படுகின்றது.
விளக்கம் தேவை
அஸ்ஸலாமு அலைக்கும்.
கண்ணேறு சம்பந்தமாக வரும் செய்திகளில் சிலவை அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் கருத்து குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம். கண்ணேறை நம்புவதால் அல்லாஹ்விற்கு இணைவைத்த குற்றம் ஏற்படுகிறது.
கூடுதல் தகவல் பார்க்க: புகாரி-5740 .
حَدَّثَنَا سُوَيْدٌ ، قَالَ : أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ ، قَالَ : أَخْبَرَنَا أَبُو الْعَلَاءِ ، عَنْ عَطِيَّةَ ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الْقَرْنِ قَدِ الْتَقَمَ الْقَرْنَ، وَاسْتَمَعَ الْإِذْنَ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ “. فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمْ : ” قُولُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، عَلَى اللَّهِ تَوَكَّلْنَا
ஸுர் ஊதுபவர் கொம்பைத் தம் வாயில்வைத்திருக்கும்போது,
ஊதுமாறு கட்டளையிடப்படுவதை
எதிர்பார்த்து கட்டளையிடப்படப்பட்டதும் ஊதத் தயாராக இருக்கும்போது நான் எவ்வாறு மகிழ்ச்சியுடன்
இருக்க முடியும் என்று நபி(ஸல்) கூறினார்கள். இது நபித்தோழர்களுக்கு கடுமையான விஷயமாகத்
தெரிந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் (அல்லாஹ் எங்களுக்கு
போதுமானவன், அவனே சிறந்த பாதுகாவலன்) எனக்கூறுங்கள் என்றார்கள்.
அபூஸயீத் அல்குத்ரீ
திர்மிதீ (2431)
عَطِيَّةَ வழியாக வரும் செய்தி பலவீனமானது
இந்த செய்தியின் மற்ற அறிவிப்பாளர் வரிசையை பதிவு செய்யவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.