தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4492

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லும்படி உத்தரவிடுவதை நான் கேட்டுள்ளேன். அவர்கள், “பாம்புகளையும் நாய்களையும் கொல்லுங்கள்; (குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவை இரண்டின் விஷத்தன்மை காரணமாகவே அவற்றைக் கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்கள் என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் என் கண்ணில் படும் எந்தப் பாம்பையும் கொன்றுவந்தேன். இந்நிலையில் ஒரு நாள் வீட்டில் வசிக்கும் பாம்பொன்றை நான் விரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), அல்லது அபூ லுபாபா (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். நான் அந்தப் பாம்பைத் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போது அவர்கள், “அப்துல்லாஹ்வே, நிறுத்துங்கள் (அதைக் கொல்லாதீர்கள்)” என்று கூறினார்கள். நான் “அவற்றைக் கொல்லும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தர விட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாம் எனத் தடை செய்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.

Book : 39

(முஸ்லிம்: 4492)

وَحَدَّثَنَا حَاجِبُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِقَتْلِ الْكِلَابِ يَقُولُ: «اقْتُلُوا الْحَيَّاتِ وَالْكِلَابَ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ، فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ، وَيَسْتَسْقِطَانِ الْحَبَالَى» قَالَ الزُّهْرِيُّ: «وَنُرَى ذَلِكَ مِنْ سُمَّيْهِمَا، وَاللهُ أَعْلَمُ» قَالَ سَالِمٌ: قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: «فَلَبِثْتُ لَا أَتْرُكُ حَيَّةً أَرَاهَا إِلَّا قَتَلْتُهَا»، فَبَيْنَا أَنَا أُطَارِدُ حَيَّةً يَوْمًا، مِنْ ذَوَاتِ الْبُيُوتِ، مَرَّ بِي زَيْدُ بْنُ الْخَطَّابِ، أَوْ أَبُو لُبَابَةَ، وَأَنَا أُطَارِدُهَا، فَقَالَ: مَهْلًا، يَا عَبْدَ اللهِ فَقُلْتُ: «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِهِنَّ»، قَالَ: «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَى عَنْ ذَوَاتِ الْبُيُوتِ»


Tamil-4492
Shamila-2233
JawamiulKalim-4148




மேலும் பார்க்க: புகாரி-3297 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.