அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃவ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பல கனவுகளைக் கண்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இந்நிலையில் நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சத்தித்(து அது குறித்து தெரிவித்)தேன்.
அப்போது அவர்கள் கூறினார்கள்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல்நலம் பாதிக்கப் பட்டுவந்தேன். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்துக்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். அவர், தாம் விரும்பாததைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அந்தக் கனவின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அந்தக் கனவைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது” என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 42
(முஸ்லிம்: 4553)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، وَأَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْحَكَمِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ
إِنْ كُنْتُ لَأَرَى الرُّؤْيَا تُمْرِضُنِي، قَالَ: فَلَقِيتُ أَبَا قَتَادَةَ، فَقَالَ: وَأَنَا كُنْتُ لَأَرَى الرُّؤْيَا فَتُمْرِضُنِي، حَتَّى سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللهِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ، فَلَا يُحَدِّثْ بِهَا إِلَّا مَنْ يُحِبُّ، وَإِنْ رَأَى مَا يَكْرَهُ فَلْيَتْفُلْ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَتَعَوَّذْ بِاللهِ مِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرِّهَا، وَلَا يُحَدِّثْ بِهَا أَحَدًا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ»
Tamil-4553
Shamila-2261
JawamiulKalim-4205
சமீப விமர்சனங்கள்