தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-766

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 100

இஷாத் தொழுகையில் சப்தமாக ஓதுதல். 

 அபூ ராஃபிவு கூறினார்:

அபூ ஹுரைரா(ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ் ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கும் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்’ என்று கூறினார்கள்.
Book : 10

(புகாரி: 766)

بَابُ الجَهْرِ فِي العِشَاءِ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ

صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ لَهُ: قَالَ: «سَجَدْتُ خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»


Bukhari-Tamil-766.
Bukhari-TamilMisc-766.
Bukhari-Shamila-766.
Bukhari-Alamiah-724.
Bukhari-JawamiulKalim-727.




1 . இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-766 , 768 , 1074 , 1078 , முஸ்லிம்-1009 , 1010 , 1011 , 1012 , 1013 , நஸாயீ-961 , 962 , 963 , 964 , 965 , 966 , 967 , 968 , அபூதாவூத்-1407 , 1408 , திர்மிதீ-573 , 574 , இப்னு மாஜா-1058 , 1059 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.