தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4693

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பனூ ஹாஷிம் குலத்தாரின் முன்னாள் அடிமையான அம்மார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எத்தனை வயது நடந்துகொண்டிருந்தது?” என்று கேட்டேன். “ஒரு கூட்டத்தில் உள்ள உம்மைப் போன்ற ஒருவருக்கு இந்த விவரம்கூட தெரியாமலிருக்கும் என்று நான் கருதவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், “இதைப் பற்றி மக்களிடம் நான் கேட்டு விட்டேன். ஆனால், அவர்கள் மாறுபட்ட கருத்தை என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, அதில் தங்களது கருத்தை அறிய விரும்பினேன்” என்று சொன்னேன்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர் எண்ணிக் கணக்கிடுவாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “நாற்பது வயதிலிருந்து தொடங்குவீராக. நாற்பதாவது வயதில் அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றார்கள். பதினைந்து ஆண்டுகள் மக்காவில் (சில வேளை எதிரிகளைப் பற்றிய) பயமின்றியும் (சில வேளை) பயத்துடனும் இருந்தார்கள். மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 43

(முஸ்லிம்: 4693)

وحَدَّثَنِي ابْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَمَّارٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ، قَالَ

أَنْ أَعْلَمَ قَوْلَكَ فِيهِ، قَالَ: أَتَحْسُبُ؟ قَالَ قُلْتُ: نَعَمْ، قَالَ: «أَمْسِكْ أَرْبَعِينَ، بُعِثَ لَهَا خَمْسَ عَشْرَةَ بِمَكَّةَ يَأْمَنُ وَيَخَافُ، وَعَشْرَ مِنْ مُهَاجَرِهِ إِلَى الْمَدِينَةِ»

– وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يُونُسَ، بِهَذَا الْإِسْنَادِ، نَحْوَ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ


Tamil-4693
Shamila-2353
JawamiulKalim-4346




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.