அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்” எனும் படைப் பிரிவுக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்களிடம் நான் சென்று, “மக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?”என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், “ஆண்களில் (மிகவும் பிரியமானவர் யார்)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு யார்?” என்று கேட்டதற்கு, “(பிறகு) உமர்” என்று கூறிவிட்டு, மேலும் பலருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள்.
Book : 44
(முஸ்லிம்: 4754)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي عُثْمَانَ
أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَهُ عَلَى جَيْشِ ذَاتِ السَّلَاسِلِ، فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ» قُلْتُ: مِنَ الرِّجَالِ؟ قَالَ «أَبُوهَا» قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «عُمَرُ» فَعَدَّ رِجَالًا
Tamil-4754
Shamila-2384
JawamiulKalim-4403
சமீப விமர்சனங்கள்