தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4755

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியிருப்பார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூபக்ர் (ரலி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்)” என்று பதிலளித்தார்கள். “அபூபக்ருக்குப் பிறகு யாரை?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “உமர் (ரலி) அவர்களை” என்று பதிலளித்தார்கள். “உமருக்குப் பிறகு யாரை?” என்று கேட்கப் பட்டபோது, “ஆபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை” என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4755)

وحَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ أَبِي عُمَيْسٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ

سَمِعْتُ عَائِشَةَ، وَسُئِلَتْ: ” مَنْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَخْلِفًا لَوِ اسْتَخْلَفَهُ؟ قَالَتْ: أَبُو بَكْرٍ، فَقِيلَ لَهَا: ثُمَّ مَنْ؟ بَعْدَ أَبِي بَكْرٍ قَالَتْ: عُمَرُ، ثُمَّ قِيلَ لَهَا مَنْ؟ بَعْدَ عُمَرَ، قَالَتْ: أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ” ثُمَّ انْتَهَتْ إِلَى هَذَا


Tamil-4755
Shamila-2385
JawamiulKalim-4404




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.