தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4772

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் தமது “தொடைகளிலிருந்து” அல்லது “கணைக்கால்களிலிருந்து” (சற்று துணி) விலகியிருந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்படியே படுத்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.

அவர்கள் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் உள்ளே வர அனுமதியளித்தார்கள். அப்போதும் அதே நிலையிலேயே (படுத்துக்கொண்டு) இருந்தார்கள். உமர் அவர்களும் (வந்து) பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து) உட்கார்ந்து தமது ஆடையை ஒழுங்குபடுத்தினார்கள்.

– (இந்த இடத்தில்) அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீஹர்மலா, “(இதுவெல்லாம்) ஒரே நாளில் நடந்தது என நான் சொல்ல (வர)வில்லை” என்று கூறுகிறார்கள்.-

உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் நான், “அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது அவருக்காக நீங்கள் அசைய வில்லை; அவர்களைப் பொருட்படுத்தவில்லை. (சகஜமாகவே இருந்தீர்கள்.) பிறகு உமர் அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்போதும் நீங்கள் அவர்களுக்காக அசையவில்லை; பொருட்படுத்தவில்லை. பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது (மட்டும்) நீங்கள் (எழுந்து) உட்கார்ந்து உங்கள் ஆடையைச் சரி செய்துகொண்டீர்கள். (ஏன் அவ்வாறு செய்தீர்கள்?)” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரைக் கண்டு வானவர்கள் நாணம் கொள்கிறார்களோ அவரைக் கண்டு நான் நாணம் கொள்ள வேண்டாமா!” என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் பன்னிரெண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4772)

3 – بَابُ مِنْ فَضَائِلِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ – قَالَ: يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا، وقَالَ الْآخَرُونَ: حَدَّثَنَا – إِسْمَاعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءٍ، وَسُلَيْمَانَ، ابْنَيْ يَسَارٍ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَجِعًا فِي بَيْتِي، كَاشِفًا عَنْ فَخِذَيْهِ، أَوْ سَاقَيْهِ، فَاسْتَأْذَنَ أَبُو بَكْرٍ فَأَذِنَ لَهُ، وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ، فَتَحَدَّثَ، ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ، فَأَذِنَ لَهُ، وَهُوَ كَذَلِكَ، فَتَحَدَّثَ، ثُمَّ اسْتَأْذَنَ عُثْمَانُ، فَجَلَسَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَوَّى ثِيَابَهُ – قَالَ مُحَمَّدٌ: وَلَا أَقُولُ ذَلِكَ فِي يَوْمٍ وَاحِدٍ – فَدَخَلَ فَتَحَدَّثَ، فَلَمَّا خَرَجَ قَالَتْ عَائِشَةُ: دَخَلَ أَبُو بَكْرٍ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ، ثُمَّ دَخَلَ عُمَرُ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ فَجَلَسْتَ وَسَوَّيْتَ ثِيَابَكَ فَقَالَ: «أَلَا أَسْتَحِي مِنْ رَجُلٍ تَسْتَحِي مِنْهُ الْمَلَائِكَةُ»


Tamil-4772
Shamila-2401
JawamiulKalim-4421




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.