அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான மேலங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள், பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள். மக்களோ அந்த மேலங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிட அழகானவை ஆகும்” என்று சொன்னார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “தூமத்துல் ஜந்தல்” பகுதியின் அரசர் “உகைதிர்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாகத் தந்தார்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அதில் “அவர்கள் பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
Book : 44
(முஸ்லிம்: 4873)حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ
أَنَّهُ أُهْدِيَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةٌ مِنْ سُنْدُسٍ، وَكَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ، فَعَجِبَ النَّاسُ مِنْهَا، فَقَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّ مَنَادِيلَ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا»
– حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَامِرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أُكَيْدِرَ دُومَةِ الْجَنْدَلِ أَهْدَى لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حُلَّةً فَذَكَرَ نَحْوَهُ، وَلَمْ يَذْكُرْ فِيهِ وَكَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ
Tamil-4873
Shamila-2469
JawamiulKalim-4521
சமீப விமர்சனங்கள்