தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4959

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள், நான் யாரிடையே அனுப்பப்பட்டுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று கூறிவிட்டு, -மூன்றாவது முறையும் அவ்வாறு கூறினார்களா, இல்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்- “பிறகு அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் உண்டு கொழுப்பதை விரும்புவார்கள். சாட்சியமளிக்கும்படி கோரப்படுவதற்கு முன்பே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (“பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று) இரண்டு முறை கூறினார்களா அல்லது மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4959)

حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، ح وحَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«خَيْرُ أُمَّتِي الْقَرْنُ الَّذِينَ بُعِثْتُ فِيهِمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» وَاللهُ أَعْلَمُ أَذَكَرَ الثَّالِثَ أَمْ لَا، قَالَ: «ثُمَّ يَخْلُفُ قَوْمٌ يُحِبُّونَ السَّمَانَةَ، يَشْهَدُونَ قَبْلَ أَنْ يُسْتَشْهَدُوا»

– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، كِلَاهُمَا، عَنْ أَبِي بِشْرٍ، بِهَذَا الْإِسْنَادِ، مِثْلَهُ. غَيْرَ أَنَّ فِي حَدِيثِ شُعْبَةَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: فَلَا أَدْرِي مَرَّتَيْنِ أَوْ ثَلَاثَةً


Tamil-4959
Shamila-2534
JawamiulKalim-4608




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.