தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4961

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், “இந்தச் சமுதாயத்தில் சிறந்தவர்கள், நான் யாரிடையே அனுப்பப்பெற்றுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மூன்றாவது தடவையில் (“பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று) கூறினார்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து ஹிஷாம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், “சத்தியம் செய்யும்படி கேட்கப்படாமலேயே சத்தியப் பிரமாணம் செய்ய அவர்கள் தாமாகவே முன்வருவார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4961)

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، كِلَاهُمَا عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِهَذَا الْحَدِيثِ

 «خَيْرُ هَذِهِ الْأُمَّةِ الْقَرْنُ الَّذِينَ بُعِثْتُ فِيهِمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»

زَادَ فِي حَدِيثِ أَبِي عَوَانَةَ، قَالَ: وَاللهُ أَعْلَمُ، أَذَكَرَ الثَّالِثَ أَمْ لَا، بِمِثْلِ حَدِيثِ زَهْدَمٍ، عَنْ عِمْرَانَ،

وَزَادَ فِي حَدِيثِ هِشَامٍ، عَنْ قَتَادَةَ «وَيَحْلِفُونَ وَلَا يُسْتَحْلَفُونَ»


Tamil-4961
Shamila-2535
JawamiulKalim-4609




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.