தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-803

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 128 சஜ்தாச் செய்யும் போது தக்பீர் கூறியவாறே குனிய வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் (சஜ்தாவிற்குச் செல்லும் போது) முழங்கால்களைத் தரையில் வைப்பதற்கு முன் தம் (உள்ளங்)கைகளை வைப்பார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

 அபூ ஸலமாவும் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மானும் அறிவித்தார்.

கடமையான தொழுகைகளிலும் அது அல்லாத (உபரித்) தொழுகைகளிலும் ரமளானிலும் ரமளான் அல்லாத நாள்களிலும் ஒவ்வொரு தொழுகையிலும் அபூ ஹுரைரா(ரலி)தக்பீர் சொல்பவர்களாக இருந்தனர். நிற்கும்போது அவர்கள் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூவு செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வதற்கு முன் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவுக்காகக் குனியும்போது ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள்; பின்னர் (இரண்டாம்) ஸஜ்தாச் செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டு எழும்போது தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும் வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்வார்கள்.

பின்னர் தொழுகையை முடித்தபின் ‘என்னுடைய உயிர் எவன் வசத்திலுள்ளதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதரின் தொழுகையைப் போன்றே உங்களுக்கு நான் தொழுது காட்டுகிறேன். உலகைப் பிரியும் வரை இதுவே நபி(ஸல்) அவர்களின் தொழுகையாக இருந்தது’ என்றும் குறிப்பிட்டார்கள்.
Book : 10

(புகாரி: 803)

بَابٌ: يَهْوِي بِالتَّكْبِيرِ حِينَ يَسْجُدُ

وَقَالَ نَافِعٌ: «كَانَ ابْنُ عُمَرَ يَضَعُ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ»

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَارِثِ بْنِ هِشَامٍ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ

كَانَ يُكَبِّرُ فِي كُلِّ صَلاَةٍ مِنَ المَكْتُوبَةِ، وَغَيْرِهَا فِي رَمَضَانَ وَغَيْرِهِ، فَيُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ يَقُولُ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ قَبْلَ أَنْ يَسْجُدَ ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الجُلُوسِ فِي الِاثْنَتَيْنِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ حَتَّى يَفْرُغَ مِنَ الصَّلاَةِ “، ثُمَّ يَقُولُ حِينَ يَنْصَرِفُ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَقْرَبُكُمْ شَبَهًا بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كَانَتْ هَذِهِ لَصَلاَتَهُ حَتَّى فَارَقَ الدُّنْيَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.