தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5200

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

இறைவனிடம் பிரார்த்திக்கும்போது வலியுறுத்திக் கேட்க வேண்டும். “நீ நினைத்தால் வழங்குவாயாக!” என்று கேட்கலாகாது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிரார்த்தித்தால் பிரார்த்தனையில் (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். “இறைவா! நீ நினைத்தால் எனக்கு வழங்குவாயாக!” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில்,இறைவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 48

(முஸ்லிம்: 5200)

3 – بَابُ الْعَزْمِ بِالدُّعَاءِ وَلَا يَقُلْ إِنْ شِئْتَ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ فِي الدُّعَاءِ، وَلَا يَقُلْ: اللهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي، فَإِنَّ اللهَ لَا مُسْتَكْرِهَ لَهُ


Tamil-5200
Shamila-2678
JawamiulKalim-4843




மேலும் பார்க்க: புகாரி-6338 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.