தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5633

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு தஜ்ஜால் மிகவும் சாதாரணமானவனே!

 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைப் பற்றி நான் கேட்(டுத் தெரிந்துகொண்)டதைவிட அதிகமாக வேறெவரும் கேட்(டுத் தெரிந்து கொண்)டதில்லை. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அவனைக் குறித்து உமக்கென்ன சிரமம்? அவனால் உமக்கெந்தத் தீங்கும் இல்லை” என்றார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவனைக் குறித்து அச்சம்தான். ஏனெனில்,) தஜ்ஜாலுடன் (மலையளவு) உணவும் நதிகளும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்றேன். “(இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அவற்றைவிட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே!” என்று சொன்னார்கள்.

Book : 52

(முஸ்லிம்: 5633)

22 – بَابٌ فِي الدَّجَّالِ وَهُوَ أَهْوَنُ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ

حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ الرُّؤَاسِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ

مَا سَأَلَ أَحَدٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُ، قَالَ: «وَمَا يُنْصِبُكَ مِنْهُ؟ إِنَّهُ لَا يَضُرُّكَ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ مَعَهُ الطَّعَامَ وَالْأَنْهَارَ، قَالَ: «هُوَ أَهْوَنُ عَلَى اللهِ مِنْ ذَلِكَ»


Tamil-5633
Shamila-2939
JawamiulKalim-5235




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.