தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-907

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 ஜுமுஆத் தொழுகைக்காக நடந்து வருவதும்,

ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் நீங்கள் விரைந்து செல்லுங்கள் எனும் (63:9ஆவது) இறை வசனமும்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) விரைவு (அஸ்ஸஃயு) எனும் சொல்லுக்கு ஜுமுஆவுக்காக தயாராகிச் செல்வது என்று பொருள் என சிலர் (விளக்கம்) கூறுகின்றனர்.

(இதே கருத்தில்தான்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த நேரத்தில் (தொழுகைக்காகத் தயாராகிச் செல்லாமல்) வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது விலக்கப்பட்டதாகும் (ஹராம்) என்று கூறினார்கள்.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் (அந்த நேரத்தில்) எல்லாவிதமான தொழில்களும் தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஜுமுஆவுடைய நாளில் ஒருவர் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால் ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும். 

 அபாயா இப்னு ரிஃபாஆ அறிவித்தார்.

நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது ‘இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
Book : 11

(புகாரி: 907)

بَابُ المَشْيِ إِلَى الجُمُعَةِ

وَقَوْلِ اللَّهِ جَلَّ ذِكْرُهُ: {فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ} [الجمعة: 9] وَمَنْ قَالَ: السَّعْيُ العَمَلُ وَالذَّهَابُ، لِقَوْلِهِ تَعَالَى: {وَسَعَى لَهَا سَعْيَهَا} [الإسراء: 19] وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «يَحْرُمُ البَيْعُ حِينَئِذٍ» وَقَالَ عَطَاءٌ: «تَحْرُمُ الصِّنَاعَاتُ كُلُّهَا» وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ الزُّهْرِيِّ: «إِذَا أَذَّنَ المُؤَذِّنُ يَوْمَ الجُمُعَةِ وَهُوَ مُسَافِرٌ فَعَلَيْهِ أَنْ يَشْهَدَ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبَايَةُ بْنُ رِفَاعَةَ، قَالَ

أَدْرَكَنِي أَبُو عَبْسٍ وَأَنَا أَذْهَبُ إِلَى الجُمُعَةِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.