தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-947

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 சுப்ஹுத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே இருள் இருக்கும்போதே தொழுவதும் தாக்குதலின் போதும் போரின் போதும் அவ்வாறே தொழுவதும். 

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஸுப்ஹுத் தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். பிறகு ‘அல்லாஹ் மிகப் பெரியவன்! கைபர் வீழ்ந்தது! ஒரு கூட்டத்தினரின் மீது நாம் தாக்குதல் தொடுத்தால் அவர்களின் முடிவு கெட்டதாக அமையும்!’ என்று கூறினார்கள்.

கைபர் வாசிகள் வீதிகளில் ஓடிக் கொண்டே ‘முஹம்மதும் அவரின் படையினரும் வந்துவிட்டனர்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், எதிரிகளின் மீது தாக்குதல் தொடுத்தார்கள். போரில் ஈடுபட்டவர்களைக் கொன்றார்கள். சிறுவர்களைக் கைதிகளாகப் பிடித்தார்கள். (கைதியாகப் பிடிபட்ட) ஸஃபிய்யா(ரலி) திஹ்யா அல்கல்பீக்குக் கிடைத்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தார்கள். அவரை விடுதலை செய்ததையே மஹராக ஆக்கி அவரை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள்.

இச்செய்தியை ஸாபித் கூறுகையில் அவரிடம் ‘அபூ முஹம்மதே! நபி(ஸல்) அவர்கள் என்ன மஹர் கொடுத்தார்கள் என்பதை அனஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களா?’ என்று அப்துல் அஸீஸ் கேட்டபோது, ‘அவரின் விடுதலையையே மஹராக’ ஆக்கியதாகக் கூறிவிட்டுப் புன்முறுவல் பூத்தார். இந்தத் தகவவை ஹம்மாத் அறிவித்தார்.
Book : 12

(புகாரி: 947)

بَابُ التَّبْكِيرِ وَالْغَلَسِ بِالصُّبْحِ وَالصَّلَاةِ عِنْدَ الْإِغَارَةِ وَالْحَرْبِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، وَثَابِتٍ البُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الصُّبْحَ بِغَلَسٍ، ثُمَّ رَكِبَ فَقَالَ:  اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ: {فَسَاءَ صَبَاحُ المُنْذَرِينَ} [الصافات: 177]

فَخَرَجُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ وَيَقُولُونَ: مُحَمَّدٌ وَالخَمِيسُ – قَالَ: وَالخَمِيسُ الجَيْشُ – فَظَهَرَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَتَلَ المُقَاتِلَةَ وَسَبَى الذَّرَارِيَّ، فَصَارَتْ صَفِيَّةُ لِدِحْيَةَ الكَلْبِيِّ، وَصَارَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ تَزَوَّجَهَا، وَجَعَلَ صَدَاقَهَا عِتْقَهَا

فَقَالَ عَبْدُ العَزِيزِ، لِثَابِتٍ: يَا أَبَا مُحَمَّدٍ أَنْتَ سَأَلْتَ أَنَسَ بْنَ مَالِكٍ: مَا أَمْهَرَهَا؟ قَالَ: أَمْهَرَهَا نَفْسَهَا، فَتَبَسَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.