பாடம் : 24 ஒருவர் தமது தாடியில் தண்ணீர் வடியும் அளவிற்கு மழையில் நனைவது.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமையன்று மிம்பரில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு கிராமவாசி எழுந்தார். ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குடும்பத்தினர் பட்டினியில் வாடுகின்றனர். எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (பிரார்த்திப்பதற்காகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். அப்போது வானத்தில் மேகம் எதுவும் இருக்கவில்லை. திடீரென மலைகளைப் போன்று மேகங்கள் திரண்டன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள் அவர்களின் தாடி வழியாக மழைத் தண்ணீர் வடிந்ததை கண்டேன்.
அன்றைய தினமும் மறுநாளும் மூன்றாவது நாளும் அதற்கடுத்த ஜும்ஆவரையுள்ள நாள்களிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. அப்போது அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்துவிட்டன. செல்வங்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தினார்கள்.
‘இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே’ என்று கூறினார்கள். அவர்கள் வானத்தை நோக்கித் தம்கையால் சைகை செய்த போதெல்லாம் மேகங்கள் விலகிச் சென்றன. முடிவில் மதீனா ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் மாறியது. ‘கனாத்’ எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. எப்பகுதியிலிருந்து வரக்கூடியவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலில்லை.
Book : 15
بَابُ مَنْ تَمَطَّرَ فِي المَطَرِ حَتَّى يَتَحَادَرَ عَلَى لِحْيَتِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، قَالَ: أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ
أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى المِنْبَرِ يَوْمَ الجُمُعَةِ قَامَ أَعْرَابِيٌّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَ المَالُ، وَجَاعَ العِيَالُ، فَادْعُ اللَّهَ لَنَا أَنْ يَسْقِيَنَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَمَا فِي السَّمَاءِ قَزَعَةٌ، قَالَ: فَثَارَ سَحَابٌ أَمْثَالُ الجِبَالِ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ المَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ، قَالَ: فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ، وَفِي الغَدِ، وَمِنْ بَعْدِ الغَدِ، وَالَّذِي يَلِيهِ إِلَى الجُمُعَةِ الأُخْرَى، فَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ – أَوْ رَجُلٌ غَيْرُهُ – فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَ البِنَاءُ وَغَرِقَ المَالُ، فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، وَقَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا» قَالَ: فَمَا جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّمَاءِ إِلَّا تَفَرَّجَتْ، حَتَّى صَارَتِ المَدِينَةُ فِي مِثْلِ الجَوْبَةِ حَتَّى سَالَ الوَادِي، وَادِي قَنَاةَ شَهْرًا، قَالَ: فَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ
சமீப விமர்சனங்கள்