தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1052

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

கிரகணத் தொழுகையை மக்களுடன் இணைந்து (ஜமாஅத்தாகத்) தொழுவது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸம்ஸம் கிணற்றிற்கு அருகில் மக்களுக்கு ஜமாஅத்தாக (கிரகணத்) தொழுகை நடத்தினார்கள்.

(இத்தொழுகையை) அலீ பின் அப்தில்லாஹ் பின் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவித்தார்கள். (இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள். 

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். அத்தொழுகையில் பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள்.

(முடித்ததும்) ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணத்தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபித் தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எதையோ பிடிக்க முயன்று பிறகு பின் வாங்கியது போல் நாங்கள் கண்டோமே ( அது ஏன்?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நான் சொர்க்கத்தைப் பார்த்தேன். அதன் ஒரு குலையைப் பிடிக்க முயன்றேன். அதை நான் பிடித்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் நீங்கள் அதை உண்பீர்கள். மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்’ என்று கூறினார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்’ என்று விடையளித்தனர். ‘அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்’ என்று கேட்கப்பட்டதற்குக் ‘கணவனை நிராகரிக்கிறார்கள்; காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்’ என்று விடையளித்தார்கள்.

அத்தியாயம்: 16

(புகாரி: 1052)

بَابُ صَلاَةِ الكُسُوفِ جَمَاعَةً

وَصَلَّى ابْنُ عَبَّاسٍ لَهُمْ فِي صُفَّةِ زَمْزَمَ

وَجَمَعَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ وَصَلَّى ابْنُ عُمَرَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ

انْخَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا نَحْوًا مِنْ قِرَاءَةِ سُورَةِ البَقَرَةِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَاذْكُرُوا اللَّهَ»

قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ ثُمَّ رَأَيْنَاكَ كَعْكَعْتَ؟ قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي رَأَيْتُ الجَنَّةَ، فَتَنَاوَلْتُ عُنْقُودًا، وَلَوْ أَصَبْتُهُ لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا، وَأُرِيتُ النَّارَ، فَلَمْ أَرَ مَنْظَرًا كَاليَوْمِ قَطُّ أَفْظَعَ،

وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ» قَالُوا: بِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُفْرِهِنَّ» قِيلَ: يَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ كُلَّهُ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ


Bukhari-Tamil-1052.
Bukhari-TamilMisc-1052.
Bukhari-Shamila-1052.
Bukhari-Alamiah-993.
Bukhari-JawamiulKalim-998.




2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-10523202 , …

மேலும் பார்க்க: புகாரி-1046 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.