தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1274

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 (இறந்தவர் விட்டுச்சென்ற பொருளைப் பங்கிடுவதற்கு முன்) மொத்தச் சொத்திலிருந்து பிரேத உடைக்குச் செலவிடல்.

அதாஉ, ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார், கத்தாதா (ரஹ்) ஆகியோர் இக்கருத்தைக் கொண்டவர்கள். அதில் நறுமண ஏற்பாட்டிற்கும் மொத்தச் சொத்திலிருந்து செலவு செய்யலாம் என அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறும் போது முதலில் பிரேத உடைக்கும் பிறகு கடனைத் தீர்க்கவும் செலவிட வேண்டும்; பிறகு மரணசாசனத்தை (வஸிய்யத்) நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், சவக்குழி (கப்று) தோண்டுவது மற்றும் நீராட்டுவதற்கான கூலியும் பிரேதஉடைச் செலவில் சேர்ந்ததே என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

 இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் அவரின் உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், ‘முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது.. அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார். அவருக்குக் கஃபனிடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.

ஹம்ஸா(ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது.. அவரும் என்னைவிடச் சிறந்தவரே… அவருக்குக் கஃபனிடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன் கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!’ எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
Book : 23

(புகாரி: 1274)

بَابٌ: الكَفَنُ مِنْ جَمِيعِ المَالِ

وَبِهِ قَالَ: عَطَاءٌ، وَالزُّهْرِيُّ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، وَقَتَادَةُ

وَقَالَ عَمْرُو بْنُ دِينَارٍ: «الحَنُوطُ مِنْ جَمِيعِ المَالِ»

وَقَالَ إِبْرَاهِيمُ: «يُبْدَأُ بِالكَفَنِ، ثُمَّ بِالدَّيْنِ، ثُمَّ بِالوَصِيَّةِ»

وَقَالَ سُفْيَانُ: «أَجْرُ القَبْرِ وَالغَسْلِ هُوَ مِنَ الكَفَنِ»

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ المَكِّيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ

أُتِيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَوْمًا بِطَعَامِهِ، فَقَالَ: «قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَكَانَ خَيْرًا مِنِّي، فَلَمْ يُوجَدْ لَهُ مَا يُكَفَّنُ فِيهِ إِلَّا بُرْدَةٌ، وَقُتِلَ حَمْزَةُ – أَوْ رَجُلٌ آخَرُ – خَيْرٌ مِنِّي، فَلَمْ يُوجَدْ لَهُ مَا يُكَفَّنُ فِيهِ إِلَّا بُرْدَةٌ،

لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ قَدْ عُجِّلَتْ لَنَا طَيِّبَاتُنَا فِي حَيَاتِنَا الدُّنْيَا ثُمَّ جَعَلَ يَبْكِي»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.