அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, ‘இஸ்லாதை ஏற்றுக் கொள்!’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.
அப்போது அவர், ‘அபுல் காஸிம் (நபி-ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அத்தியாயம்: 23
(புகாரி: 1356)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»
Bukhari-Tamil-1356.
Bukhari-TamilMisc-1356.
Bukhari-Shamila-1356.
Bukhari-Alamiah-1268.
Bukhari-JawamiulKalim-1274.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹம்மாத் பின் ஸைத் —> ஸாபித் பின் அஸ்லம் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, புகாரி-1356 , 5657 , அபூதாவூத்-3095 , குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,
- ஷரீக் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஈஸா —> அப்துல்லாஹ் பின் ஜப்ர் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, ஹாகிம்-,
வேறு சில நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகள்…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1672 ,
சமீப விமர்சனங்கள்