தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-26

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மக்காவின் வழியில் ஒரு இரவு நபி(ஸல்) அவர்கள் ஓய்வெடுத்தார்கள். (சுப்ஹு)தொழுகைக்கு தங்களை எழுப்பி விடும்படி பிலாலிடம் பொறுப்பு ஒப்படைத்தார்கள். பிலால்(ரலி) தூங்கினார்கள். மக்களும் விழிக்கும் வரை தூங்கி விட்டனர். அவர்களில் சூரியன் உதயமானது. மக்கள் விழித்தனர். திடுக்குற்றார்கள். அந்த ஓடையில் இருந்து வெளியேறி புறப்படும்படி நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். ”(வழிகெடுக்கும்) ஷைத்தான் உள்ள பள்ளத்தாக்கு இது”” என்றும் கூறினார்கள். அந்த பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற மக்கள் வாகனங்களில் ஏறினார்கள். (சிறிது தூரம் சென்றதும்) இறங்கி விடவும், ஒளுச் செய்திடவும் நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். தொழுகைக்கு பாங்கு கூற அல்லது இகாமத் கூற பிலால்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழ வைத்தார்கள். பின்பு மக்களை நோக்கினார்கள். அவர்களின் (முகத்தில்) திடுக்குற்ற நிலையைக் கண்டார்கள்.

மனிதர்களே..! அல்லாஹ் நம்முடைய உயிர்களை (சிறிது நேரம்) கைப்பற்றிக் கொண்டான். அவன் நாடியிருந்தால் இது அல்லாத (முன்) நேரத்திலேயே அதைத் திருப்பித் தந்திருப்பான். உங்களில் ஒருவர் தொழாமல் தூங்கினால் அல்லது மறந்து விட்டால் பின்பு (நினைவு வந்து) அதிர்ச்சியுற்றால் உரிய நேரத்தில் எப்படித் தொழுவாரோ அது போலவே தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அபூபக்கர்(ரலி) பக்கம் திரும்பி, ”ஷைத்தான், நின்று கொண்டிருந்த பிலாலிடம் வந்து, அவரை படுக்கச் செய்தான், (தூங்கச் செய்ய) சிறுவனைத் தட்டிக் கொடுப்பது போல், பிலாலையும் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். முடிவில் பிலால் தூங்கி விட்டார்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிலாலை அழைத்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறியது போன்ற விஷயத்தையே பிலால்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள், ”நிச்சயமாக, நீங்கள் இறைத்தூதர் என சாட்சி கூறுகிறேன்”” என்று கூறினார்கள். இதை ஸைத் இப்னு அஸ்லம் கூறுகிறார்கள்.

(முஅத்தா மாலிக்: 26)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّهُ قَالَ

عَرَّسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِطَرِيقِ مَكَّةَ. وَوَكَّلَ بِلَالًا أَنْ يُوقِظَهُمْ لِلصَّلَاةِ. فَرَقَدَ بِلَالٌ وَرَقَدُوا. حَتَّى اسْتَيْقَظُوا وَقَدْ طَلَعَتْ عَلَيْهِمُ الشَّمْسُ، فَاسْتَيْقَظَ الْقَوْمُ، وَقَدْ فَزِعُوا. فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْكَبُوا حَتَّى يَخْرُجُوا مِنْ ذَلِكَ الْوَادِي، وَقَالَ: «إِنَّ هَذَا وَادٍ بِهِ شَيْطَانٌ»، فَرَكِبُوا حَتَّى خَرَجُوا مِنْ ذَلِكَ الْوَادِي. ثُمَّ أَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْزِلُوا، وَأَنْ يَتَوَضَّئُوا. وَأَمَرَ بِلَالًا أَنْ يُنَادِيَ بِالصَّلَاةِ، أَوْ يُقِيمَ. فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ. ثُمَّ انْصَرَفَ إِلَيْهِمْ، وَقَدْ رَأَى مِنْ فَزَعِهِمْ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَنَا، وَلَوْ شَاءَ لَرَدَّهَا إِلَيْنَا فِي حِينٍ غَيْرِ هَذَا، فَإِذَا رَقَدَ أَحَدُكُمْ عَنِ الصَّلَاةِ أَوْ نَسِيَهَا، ثُمَّ فَزِعَ إِلَيْهَا، فَلْيُصَلِّهَا، كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا»، ثُمَّ الْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ: «إِنَّ الشَّيْطَانَ أَتَى بِلَالًا وَهُوَ قَائِمٌ يُصَلِّي، فَأَضْجَعَهُ، فَلَمْ يَزَلْ يُهَدِّئُهُ، كَمَا يُهَدَّأُ الصَّبِيُّ حَتَّى نَامَ»، ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا. فَأَخْبَرَ بِلَالٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ الَّذِي أَخْبَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-26.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.