தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-45

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

ஒளுவிற்காக சுத்தமான தண்ணீர்

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நாங்கள் கடல் பயணம் செய்கிறோம். குறைந்த அளவு தண்ணீரையே எங்களுடன் எடுத்துச் செல்கின்றோம். அதன் மூலம் நாங்கள் உளுச் செய்தால் நாங்கள் தாகத்திற்கு ஆளாகுவோம். எனவே, கடல் நீரில் நாங்கள் உளுச் செய்யலாமா? என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎..

(இது அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, ஹாகிம், தராகுத்னீ, பைஹகீ, இப்னு அபீ ஷைபா – விலும் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 45)

11- الطَّهُورُ لِلْوُضُوءِ.

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، مِنْ آلِ بَنِي الْأَزْرَقِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ أَبِي بُرْدَةَ، وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»


Muwatta-Malik-Tamil-40.
Muwatta-Malik-TamilMisc-37.
Muwatta-Malik-Shamila-45.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-42.




மேலும் பார்க்க: திர்மிதீ-69 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.