தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-55

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கைபர் போர் வருடம், கைபரை அடுத்த ‘ஸஹபாஹ்” என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்கள் (இளைப்பாற) இறங்கினார்கள். அஸரைத் தொழுதார்கள். பின்பு பயண உணவைக் கொண்டு வரும்படி கூறினார்கள். மணிக் கோதுமைத் தவிர (வேறு எதுவும்) கொண்டு வரப்படவில்லை. (அதை இழைக்கும்படி) ஏவினார்கள். குழைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். நாங்களும் சாப்பிட்டோம். பின்பு மஹ்ரிபு தொழுகைக்காக நின்றார்கள். வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழ வைத்தார்கள் என சுவைத் இப்னு நுஹ்மான்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, நஸயீ யில் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 55)

وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، مَوْلَى بَنِي حَارِثَةَ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ، أَنَّهُ أَخْبَرَهُ

أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَامَ خَيْبَرَ. حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ وَهِيَ مِنْ أَدْنَى خَيْبَرَ، نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَصَلَّى الْعَصْرَ. ثُمَّ دَعَا بِالْأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكَلْنَا. ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ فَمَضْمَضَ وَمَضْمَضْنَا. ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-55.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.