தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-105

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் நான் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் சூரியன் உதயமாகிய பின் ஒளுச் செய்து, பின்பு தொழுததைப் பார்த்தேன். இந்தத் தொழுகையைத் தான் (சற்று முன்) தொழுதீர்களே! என்றேன். சுப்ஹுத் தொழுகைக்காக நான் ஒளுச் செய்து விட்டு, என் மறைவுறுப்பைத் தொட்டேன். எனவே (மீண்டும்) ஒளுச் செய்தேன். மீண்டும் தொழுதேன் என்று பதில் கூறினார்கள். இதை ஸாலிம் கூறுகின்றார்கள்.

(குறிப்பு: சதாரணமாக மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது. ஆசையுடன் தொட்டு, அதன் மூலம் மதீ வெளிப்பட்டாலே ஒளு முறியும். மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது என்று வந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).

(முஅத்தா மாலிக்: 105)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ

كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي سَفَرٍ، فَرَأَيْتُهُ، بَعْدَ أَنْ طَلَعَتِ الشَّمْسُ، تَوَضَّأَ ثُمَّ صَلَّى. قَالَ: فَقُلْتُ لَهُ: إِنَّ هَذِهِ لَصَلَاةٌ مَا كُنْتَ تُصَلِّيهَا، قَالَ: «إِنِّي بَعْدَ أَنْ تَوَضَّأْتُ لِصَلَاةِ الصُّبْحِ مَسِسْتُ فَرْجِي، ثُمَّ نَسِيتُ أَنْ أَتَوَضَّأَ، فَتَوَضَّأْتُ وَعُدْتُ لِصَلَاتِي»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-105.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.