தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-125

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்களும் உள்ளடக்கிய உம்ராவுக்குச் சென்ற பயணக் கூட்டத்தில் உமர்(ரலி) அவர்களுடன் நானும் இருந்தேன். உமர்(ரலி) அவர்கள் வழியில் தண்ணீருக்கு சற்று அருகே தூங்கி ஸ்கலிதமாகி விடடார்கள். கூட்டத்தில் தண்ணீர் ஏதும் இல்லாத நிலையில் விடிய ஆரம்பித்தது. தண்ணீர் கிடைக்கும் இடத்திற்குச் சென்றார்கள். விடிந்ததும் விந்து பட்ட ஈரத்தைக் கழுவினார்கள்.

”சுப்ஹு ஆகி விட்டது. எங்களிடம் நிறைய ஆடைகள் உள்ளன. கழுவிய உங்கள் ஆடையைக் கழற்றுங்கள் என அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அம்ரு இப்னுல் ஆஸ் அவர்களே! பல ஆடைகள் நீ பெற்றுக் கொண்டதால் மற்ற மனிதர்களிடமும் பல ஆடைகள் இருக்குமா? என்ன! உமக்கு வந்த ஆச்சாரியமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதை நான் செய்தால் சுன்னத் ஆகி விடும். எனினும் நான் விந்தைப் பார்த்த இடத்தைக் கழுவுவேன். நான் பார்க்காத இடத்தை (தண்ணீரால்) தெளிப்பேன் என்று உமர்(ரலி) கூறினார்கள்.

இதை யஹ்யா இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாக உர்வா கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 125)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ

أَنَّهُ اعْتَمَرَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَكْبٍ فِيهِمْ عَمْرُو بْنُ الْعَاصِ، وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَرَّسَ بِبَعْضِ الطَّرِيقِ، قَرِيبًا مِنْ بَعْضِ الْمِيَاهِ. فَاحْتَلَمَ عُمَرُ وَقَدْ كَادَ أَنْ يُصْبِحَ، فَلَمْ يَجِدْ مَعَ الرَّكْبِ مَاءً. فَرَكِبَ، حَتَّى جَاءَ الْمَاءَ، فَجَعَلَ يَغْسِلُ مَا رَأَى مِنْ ذَلِكَ الِاحْتِلَامِ، حَتَّى أَسْفَرَ.

فَقَالَ لَهُ عَمْرُو بْنُ الْعَاصِ: أَصْبَحْتَ وَمَعَنَا ثِيَابٌ، فَدَعْ ثَوْبَكَ يُغْسَلُ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «وَاعَجَبًا لَكَ يَا عَمْرُو بْنَ الْعَاصِ لَئِنْ كُنْتَ تَجِدُ ثِيَابًا أَفَكُلُّ النَّاسِ يَجِدُ ثِيَابًا؟ وَاللَّهِ لَوْ فَعَلْتُهَا لَكَانَتْ سُنَّةً. بَلْ أَغْسِلُ مَا رَأَيْتُ، وَأَنْضِحُ مَا لَمْ أَرَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-125.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.