தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-134

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 31

தயம்மும் பற்றி

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். ‘பைதா” அல்லது ‘தாதுல் ஜைத்” என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து நகை ஒன்று தொலைந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) தங்கினார். அவர்களுடன் மக்களும் தங்கி விட்டனர். அவ்விடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை.

மக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, (உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும், மக்களையும் (தண்ணீர் இல்லாத இடத்தில்) தங்க வைத்து விட்டார். அவர்கள் வசமும் தண்ணீர் இல்லை. இவ்விடத்திலும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என் மடியில்; தூங்கும் பொது என்னிடம் அபூபக்கர் (ரலி) வந்து, ”நபி (ஸல்) அவர்களையும், மக்களையும் தங்க வைத்து விட்டாயே! இந்த இடத்திலும் தண்ணீர் இல்லை. மக்களிடமும் தண்ணீர் இல்லை”” என்று கூறி என்னை கண்டித்தார்கள். தன் கையால் என் இடுப்பில் குத்தினார்கள். என் தொடையில் நபி (ஸல்) அவர்களின் தலை இருந்ததே தவிர நான் அசைவதைத் தடுக்கவில்லை. தண்ணீர் கிடைக்காத நிலையிலேயே நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு நேரத்தை அடைந்தார்கள். உடனே அல்லாஹ் தயம்மும் பற்றிய வசனத்தை இறக்கி வைத்தான். பின்பு நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பினோம். அதன் கீழே என் கழுத்து நகையைப் பெற்றுக் கொண்டோம் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது பற்றி உஸைத் இப்னு ஹுழைர் அவர்கள், ”அபூபக்கர் குடும்பத்தினரே! உங்கள் மூலம் (மக்களுக்கு) ஏற்பட்ட முதல் பரக்கத் இதுவல்ல, (இன்னும் பல) என்று கூறுவார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது).

(முஅத்தா மாலிக்: 134)

31- هَذَا بَابٌ فِي التَّيَمُّمِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي. فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ. وَأَقَامَ النَّاسُ مَعَهُ. وَلَيْسُوا عَلَى مَاءٍ. وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ. فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، قَالَتْ عَائِشَةُ فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي، قَدْ نَامَ فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ. وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ. قَالَتْ عَائِشَةُ: فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ. وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي. فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. قَالَتْ: فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-134.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.