தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-360

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற போது பள்ளிக்கு வந்தார்கள். அதுசமயம் மக்களுக்கு நின்றவாறு அபூபக்கர்(ரலி) அவர்கள் தொழ வைத்தார்கள். அபூபக்கர்(ரலி) பின் வாங்கினார்கள். ‘நீர் முன் போல் இருக்கவும்” என்று அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். அபூபக்கர்(ரலி) அருகில் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதார்கள். மக்கள், அபூபக்கர்(ரலி) அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதார்கள் என்று உர்வா கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 360)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي مَرَضِهِ. فَأَتَى فَوَجَدَ أَبَا بَكْرٍ وَهُوَ قَائِمٌ يُصَلِّي بِالنَّاسِ، فَاسْتَأْخَرَ أَبُو بَكْرٍ. «فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ كَمَا أَنْتَ». فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ. فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ، وَكَانَ النَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-360.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.