தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-419

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 94

லுஹாத் தொழுகை முறை

எனது பாட்டி முலைகா அவர்கள் நபி(ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். நபி(ஸல்) அர்கள் சாப்பிட்டார்கள். பின்பு, எழுந்திருங்கள், உங்களுக்கு நான் தொழ வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீண்ட நாட்களாக பயன்படுத்திய இற்றுப் போன (பழைய) பாயில் நான் நின்றேன். பாயில் தண்ணீர் தெளித்துப் பயன்படுத்தினேன். அவர்கள் தொழ வைக்கத் தயாரானார்கள். அவர்களுக்குப் பின்னால் (எங்கள் வீட்டில் இருந்து) அனாதையான ஒருவருடன் நான் அணிவகுத்து நின்றேன். எங்களுக்குப்பின் என் பாட்டி இருந்தார். எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழ வைத்து முடித்தார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 419)

94- بَابُ جَامِعِ سُبْحَةِ الضُّحَى

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ، دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ. فَأَكَلَ مِنْهُ. ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا فَلِأُصَلِّيَ لَكُمْ»، قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ، مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ. فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-419.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.