தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-451

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 105

தொழுகையில் அவசியம் ஏற்பட்டால் திரும்புவது, கை தட்டுவது

நபி (ஸல்) அவர்கள் அம்ரு இப்னு அவ்ஃபு (ரலி) அவர்களின் குடும்பத்தாரிடையே சமாதானப்படுத்துவதற்காக அவர்களிடம் சென்று விட்டார்கள். அதுசமயம் தொழுகை நேரம் வந்தது. அபூபக்கர் (ரலி) அவர்களிடம் முஅத்தின் வந்து, நான் இகாமத் கூறுகிறேன். மக்களுக்கு தொழ வைக்கின்றீர்களா? எனக் கேட்டார். சரி என்று கூறிய அபூபக்கர் (ரலி) தொழ வைத்தார்கள். மக்கள் தொழுகையில் இருக்கும் போது நபி(ஸல்) அவா்கள் வந்தார்கள். ஸஃப்பில் (வாரிசையில்) நிற்பதற்காக ஊடுறுவினார்கள். (நபி (ஸல்) அவர்களின் வருகையை அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு உணர்த்த) மக்கள் கையொலி எழுப்பினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் தொழுகையில் இருந்து திரும்பிப் பார்க்காதவர்களாக இருந்தார்கள். மக்களின் கரவொலி அதிகமானதுமே அபூபக்கர் (ரலி) திரும்பி, நபி (ஸல்) அவர்களைக் கண்டார்கள். ”நீர் உன் இடத்தில் நிற்பீராக”” என அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் கைகளை உயர்த்தி, நபி (ஸல்) அவர்கள் தன்னை (தொழ வைக்க) கட்டளையிட்டதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு பின்வாங்கி வந்து (ஸஃப்பில்) சரிசமமாக நின்று கொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னோக்கிப் போய் தொழ வைத்தார்கள்.

பின்பு தொழுது முடிந்ததும், அபூபக்கர் அவர்களே! நான் அனுமதித்தப் பின்பும் (நீர் தொழ வைக்க) நிற்காததற்கு காரணம் என்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் முன் நின்று தொழ வைக்க அபூ குஹஃபாவின் மகனுக்கு தகுதி இல்லை என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள். கரவொலி அதிகரித்திட நான் கண்டேன்.

தொழுகையில் இது போன்ற நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் சுப்ஹானல்லாஹ் என தஸ்பீஹ் கூறட்டும். ஒருவர் தஸ்பீஹ் கூறினால் அவரின் பக்கம் (இமாமான) நீர் திரும்பவும். கரவொலி எழுப்பும் செயல் பெண்களுக்குரியதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை ஸஹ்ல் இப்னு ஸஹ்துஸ் ஸாஇதி (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 451)

105- بَابُ الِالْتِفَاتِ وَالتَّصْفِيقِ عِنْدَ الْحَاجَةِ فِي الصَّلَاةِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ سَلَمَةَ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ. وَحَانَتِ الصَّلَاةُ. فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، فَقَالَ: أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ: نَعَمْ. فَصَلَّى أَبُو بَكْرٍ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ فِي الصَّلَاةِ. فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ. فَصَفَّقَ النَّاسُ. وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ. فَلَمَّا أَكْثَرَ النَّاسُ مِنَ التَّصْفِيقِ، الْتَفَتَ أَبُو بَكْرٍ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِ امْكُثْ مَكَانَكَ». فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ. وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ. فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ»، فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ، أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمْ مِنَ التَّصْفِيحِ؟ مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ. فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ وَإِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-451.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.