தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-468

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கிப்லாவின் சுவற்றில் தன் முதுகை சாய்த்து (அமர்ந்து) இருந்த போது, நான் தொழுது கொண்டிருந்தேன். என் தொழுகையை நான் முடித்ததும், (என்) இடது புறத்தில் இருந்த அவர்களை நோக்கித் திரும்பினேன். ”நீ உன் வலது புறம் திரும்பாமல் இருக்கக் காரணம் என்ன?”” என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் கேட்டார்கள். உங்களை (இடதுபுறம்) பார்த்தேன். அதனால் உங்கள் பக்கம் திரும்பினேன் என்று நான் கூறினேன். ”நிச்சயமாக நீ சாரியாகச் சொன்னாய். சில பேர் வலது பக்கம் (மட்டும்) திரும்பு”” என்கின்றனர். (அவ்வாறு அல்ல). நீ தொழுதால் நீ உன் வலத புறம் (திரும்ப) விரும்பினாலும், இடப்புறம் (திரும்ப) விரும்பினாலும் நீ விரும்பும் பக்கம் திரும்பு என்னு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதாக வாயிஉ இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 468)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ أَنَّهُ قَالَ

كُنْتُ أُصَلِّي وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى جِدَارِ الْقِبْلَةِ، فَلَمَّا قَضَيْتُ صَلَاتِي انْصَرَفْتُ إِلَيْهِ مِنْ قِبَلِ شِقِّي الْأَيْسَرِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «مَا مَنَعَكَ أَنْ تَنْصَرِفَ عَنْ يَمِينِكَ؟» قَالَ فَقُلْتُ: رَأَيْتُكَ، فَانْصَرَفْتُ إِلَيْكَ. قَالَ عَبْدُ اللَّهِ: ” فَإِنَّكَ قَدْ أَصَبْتَ. إِنَّ قَائِلًا يَقُولُ: انْصَرِفْ عَنْ يَمِينِكَ، فَإِذَا كُنْتَ تُصَلِّي، فَانْصَرِفْ حَيْثُ شِئْتَ. إِنْ شِئْتَ عَنْ يَمِينِكَ. وَإِنْ شِئْتَ عَنْ يَسَارِكَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-468.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.