தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-486

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உங்களில் ஒருவர் தூங்கும் போது, அவாரின் தலை உச்சியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களைப் போடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின் போதும் நீண்ட இரவு நேரம் உள்ளது. நன்றாகத் தூங்கு’ என்று கூறுவான். அப்போது அவர் விழித்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒருமுடிச்சு அவிழ்ந்து விடும். அவர் ஒளுச் செய்து விட்டால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடும். அடுத்து அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. இதனால் அவர் சுதந்திரமானவராக உளத்தூய்மையானவராக காலையில் எழுவார். இவ்வாறு நடந்து கொள்ளவில்லையென்றால், கடின இதயமானவராக, சோம்பேறியாக எழுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 486)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ، إِذَا هُوَ نَامَ، ثَلَاثَ عُقَدٍ. يَضْرِبُ مَكَانَ كُلِّ عُقْدَةٍ، عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ، فَارْقُدْ. فَإِنِ اسْتَيْقَظَ، فَذَكَرَ اللَّهَ، انْحَلَّتْ عُقْدَةٌ. فَإِنْ تَوَضَّأَ، انْحَلَّتْ عُقْدَةٌ. فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقَدُهُ. فَأَصْبَحَ نَشِيطًا، طَيِّبَ النَّفْسِ. وَإِلَّا، أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-486.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.