அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பயத்தொழுகையைப் பற்றி கேட்கப்பட்ட போது, ‘இமாமும், அவருடன் ஒருபிரிவினரும் (கிப்லாவை) முன்னோக்குவர். அவர்களுக்கு இமாம் ஒரு ரக்அத்தை தொழ வைப்பார். அவருக்கும் பகைவருக்குமிடையே தொழாத ஒரு பிரிவினர் இருப்பர். அவருடன் இருப்போர் ஒரு ரக்அதைத் தொழுததும் ஸலாம் கொடுக்காமல் தொழாமல் இருப்போரின் இடத்திற்கு பின்னோக்கி வருவார்கள். தொழாதவர்கள் முன்னோக்கி வந்து இமாமுடன் ஒரு ரக்அத் தொழுவார்கள். உடனே இமாம் இரண்டு ரக்அத் தொழுதவராக முடித்துக் கொள்வார்கள். பின்பு இரண்டு பிரிவினாரில் ஒவ்வொருவரும் இமாம் தொழுகையை முடித்த பின்பு தனித்தனியே ஒரு ரக்அத் தொழுவார்கள். இரண்டு பிரிவினருடைய இரண்டு ரக்அத் தொழுதவர்களாக ஆகிவிடுவர். போரில் பயம் கடுமையாக இருந்தால் அவர்கள் இருந்த இடத்தில் நின்றவாறு அ;லலது வாகனத்தில் இருந்து கிப்லாவை முன்னோக்கியோ அல்லது முன்னோக்காமலோ தொழுவார்கள் என்று பதில் கூறினார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.
இப்னு உமர்(ரலி) அவர்கள் இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள் என நான் கருதுகிறேன் என நாபிஉ கூறியதாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 505)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاةِ الْخَوْفِ قَالَ: «يَتَقَدَّمُ الْإِمَامُ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ. فَيُصَلِّي بِهِمُ الْإِمَامُ رَكْعَةً. وَتَكُونُ طَائِفَةٌ مِنْهُمْ بَيْنَهُ وَبَيْنَ الْعَدُوِّ لَمْ يُصَلُّوا. فَإِذَا صَلَّى الَّذِينَ مَعَهُ رَكْعَةً، اسْتَأْخَرُوا مَكَانَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، وَلَا يُسَلِّمُونَ. وَيَتَقَدَّمُ الَّذِينَ لَمْ يُصَلُّوا فَيُصَلُّونَ مَعَهُ رَكْعَةً. ثُمَّ يَنْصَرِفُ الْإِمَامُ، وَقَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَتَقُومُ كُلُّ وَاحِدَةٍ مِنَ الطَّائِفَتَيْنِ فَيُصَلُّونَ لِأَنْفُسِهِمْ رَكْعَةً رَكْعَةً. بَعْدَ أَنْ يَنْصَرِفَ الْإِمَامُ. فَيَكُونُ كُلُّ وَاحِدَةٍ مِنَ الطَّائِفَتَيْنِ قَدْ صَلَّوْا رَكْعَتَيْنِ، فَإِنْ كَانَ خَوْفًا هُوَ أَشَدَّ مِنْ ذَلِكَ، صَلَّوْا رِجَالًا قِيَامًا عَلَى أَقْدَامِهِمْ. أَوْ رُكْبَانًا مُسْتَقْبِلِي الْقِبْلَةِ. أَوْ غَيْرَ مُسْتَقْبِلِيهَا»
قَالَ مَالِكٌ: قَالَ نَافِعٌ لَا أَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ إِلَّا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-505.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்