தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-507

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 119

கிரகணத் தொழுகை முறை

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு தொழ வைத்தார்கள். (அதுசமயம்) அவாகள் (தொழ)நின்றார்கள். (நீண்ட கிராஅத் மூலம்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். அப்போது ருகூஉ வையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்பு (கிராஅத் ஓதியவர்களாக) நின்றார்கள். அது முதல் நிலையை விட சற்றுக் குறைவாக நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். முதலில் செய்த நீண்ட நேர ருகூஉ போன்று இல்லாமல் குறைவான நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (ருகூஉ வில் இருந்து) எழுந்து ஸஜ்தா செய்தார்கள். பின்பு முன்பு போலவே மற்றொரு ரக்அத் தொழ வைத்து, தொழுகையை முடித்தார்கள். அப்போது சூரியன் கிரகண நிலையில் இருந்து நீங்கி இருந்தது. உடனே மக்களுக்கு உரை நிகழ்த்தலானார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு, ‘நிச்சயமாக இந்த சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்து போனதற்காகவோ, பிறப்பதற்காகவோ, அவ்விரண்டும் கிரகணத்திற்கும் வருவதில்லை. நீங்கள் கிரகண நிலையைக் கண்டால், அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள்.தர்மம் செய்யுங்கள் என்று கூறி விட்டு, முஹம்மதின் சமுதாயமே! அல்;லாஹ்வின் மீது சத்தியமாக தன் அடியான் – ஆணோ, பெண்ணோ, விபச்சாரம் செய்வதே அல்லாஹ்விடம் கோபத்திற்குரிய ஒன்று. முஹம்மதின் சமுதாயமே! நான் அறிந்தவைகளை நீங்கள் அறிந்திருந்தால் குறைவாக சிரித்திருப்பீர்கள். அதிகமாக அழுதிருப்பீர்கள் என்றும் (தன் உரையில்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 507)

12 – كِتَابُ صَلَاةِ الْكُسُوفِ
119- بَابُ الْعَمَلِ فِي صَلَاةِ الْكُسُوفِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ

خَسَفَتِ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ، وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَسَجَدَ. ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِثْلَ ذَلِكَ. ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ. فَخَطَبَ النَّاسَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ. لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ. وَكَبِّرُوا، وَتَصَدَّقُوا، ثُمَّ قَالَ: يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ مَا مِنْ أَحَدٍ أَغْيَرَ مِنَ اللَّهِ أَنْ يَزْنِيَ عَبْدُهُ أَوْ تَزْنِيَ أَمَتُهُ. يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ. لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ، لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-507.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.