தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-508

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

சூரிய கிரகணம் ஏற்பட்டது.அப்போது நபித்தோழர்களும், நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். நீண்ட நேரம் சூரா பகரா (2வது அத்தியாயம்) ஓதும் அளவுக்கு நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தா செய்தார்கள். பின்பு முந்தின ரக்அத்தினைப் போன்று (நீண்ட நேரமின்றி சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்திய ருகூஉ போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு ருகூஉ விலிருந்து எழுந்து முந்திய நிலை போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். முந்திய ருகூஉ போலன்றி (சுமாராக) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தாச் செய்து (தொழுகையை) முடித்தார்கள். (அதுசமயம்) சூரியன் (கிரகண நிலையிலிருந்து வெளியேறி) பிரகாசமாயிருந்தது.

நிச்சயமாக சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்து இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்திட்டதாலோ, பிறப்பதினாலோ அவ்விரண்டையும் கிரகணம் பீடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இந்த உங்களின் இடத்தில் எதையோ எடுப்பது போன்றும் பின்பு நீங்கள் பின் வாங்குவது போன்றும் கண்டோம்’ என்று நபித்தோழர்கள் கூறினர். ‘நான் சொர்க்கத்தைக் கண்டேன்’. அதில் இருந்து ஒரு கிளையை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் அதை நீங்கள் உலகம் உள்ளளவும் சாப்பிட்டிருப்பீர்கள். மேலும் நரகத்தைக் கண்டேன். இதைப் போன்று நான் கடுமையாகக் கண்டதில்லை. அதில் பெண்களை அதிகமாகக் கண்டேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறியதும், இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஏன்? (பெண்கள் நரகில் உள்ளனர்?) எனக் கேட்டனர். அவர்கள் மாறு செய்கின்றனர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுக்கு அவர்கள் மாறு செய்தார்களா? எனக் கேட்கப்பட்ட போது, அவர்ள் கணவருக்கு மாறு செய்கிறார்கள். காலம் முழுதும் அவர்களுக்கு நீ நல்லது செய்தாலும் உன்னிடம் ஒரு குறையைக் கண்டால், உன்னிடம் அறவே நான் நல்லதைக் கண்டதில்லை என்று அவள் கூறுவது மூலம் அவர்கள் உபகாரத்திற்கும் மாறு செய்கிறார்கள். (எனவே, நரகிற்கு அதிகம் செல்கின்றனர்) என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

இதை அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 508)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ

خَسَفَتِ الشَّمْسُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ مَعَهُ: فَقَامَ قِيَامًا طَوِيلًا نَحْوًا مِنْ سُورَةِ الْبَقَرَةِ، قَالَ: ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ سَجَدَ. ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ سَجَدَ. ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ. فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَاذْكُرُوا اللَّهَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ هَذَا، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ. فَقَالَ: «إِنِّي رَأَيْتُ الْجَنَّةَ. فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا. وَلَوْ أَخَذْتُهُ لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا. وَرَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَ كَالْيَوْمِ مَنْظَرًا قَطُّ أَفْظَعَ. وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»، قَالُوا: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لِكُفْرِهِنَّ»، قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” وَيَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الْإِحْسَانَ. لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ كُلَّهُ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-508.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.