தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-544

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணம் சென்றார்கள். அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் சென்றார்கள். ஒரு விஷயம் பற்றி அவர் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்லை. பின்பு மீண்டும் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்கள், ”உம்மை உமரின் தாய் இழக்கட்டுமாக! மூன்று முறை இறைத்தூதாரிடம் வற்புறுத்தினாய், ஒவ்வொரு முறையும் உமக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லையே”” என்று (தமக்குத்தாமே) கூறிக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

நான் உடனே என் ஒட்டகையை ஓட்டிக் கொண்டு, மக்கள் முன் சென்றேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கப்படக் கூடும் என பயந்தேன். சிறிது நேரம் கூட இல்லை. என்னை சப்தமிட்டு அழைப்பவரின் குரல் கேட்டேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கபட்டிருக்கலாம் என நான் பயந்தவனாகக் கூறிக் கொண்டேன். உடனே நபி (ஸல்) அவா்களிடம் வந்து, ஸலாம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இரவு என் மீது எனக்கு ஒரு அத்தியாயம் இறக்கப்பட்டுள்ளது. அது சூரியன் உதயமான இன்றைய நாளை விட எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது”” என்று கூறி விட்டு, நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியை அளித்து விட்டோம் (என்று துவங்கும்) 48:1 வசனத்தை ஓதினார்கள்.

இதை அஸ்லம் கூறியதாக அவர்களின் மகன் ஸைத் கூறுகின்றார்கள். (இது புகாரியிலும் இடம் பெற்றுள்ளது).

(முஅத்தா மாலிக்: 544)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ. وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلًا، فَسَأَلَهُ عُمَرُ عَنْ شَيْءٍ، فَلَمْ يُجِبْهُ. ثُمَّ سَأَلَهُ، فَلَمْ يُجِبْهُ. ثُمَّ سَأَلَهُ، فَلَمْ يُجِبْهُ. فَقَالَ عُمَرُ: ثَكِلَتْكَ أُمُّكَ، عُمَرُ نَزَرْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ. كُلُّ ذَلِكَ لَا يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي. حَتَّى إِذَا كُنْتُ أَمَامَ النَّاسِ وَخَشِيتُ أَنْ يُنْزَلَ فِيَّ قُرْآنٌ. فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي قَالَ، فَقُلْتُ: لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ، قَالَ: فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ. فَقَالَ: «لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ، هَذِهِ اللَّيْلَةَ، سُورَةٌ. لَهِيَ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ»، ثُمَّ قَرَأَ: ” {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1]


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-544.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.