தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-545

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

”உங்களில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். உங்களின் தொழுகையே அவர்களின் தொழுகையேயாகும். உங்களின் நோன்புகளே அவர்களின் நோன்புகளாகும், உங்களின் செயல்களே அவர்களின் செயல்களாகும் நீங்ள் ஒப்பிட்டு நோக்குவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆனால்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழிகளை விட்டும் அது கடக்காது. வேட்டைப் பிராணியிலிருந்து அம்பு (பட்டு) வெளியாவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியயேறுவார்கள். அம்பின் நுனியில் போய் பார்ப்பீர்.அதில் (அடையாளம்) எதையும் காண மாட்டீர். அம்பின் அடியில் பார்ப்பீர். எதையும் அப்போது காண மாட்டீர். அம்பின் இறகையும் பார்ப்பீர். அதிலும் (அடையாளம்) எiதையும் காண மாட்டீர். (இறுதியில் அம்பு வேட்டைப் பிராணியை) குத்தியதா? என சந்தேகம் கொள்வீர். (அந்த மாதிரி அவர்களின் வழிபாட்டின் பயன் அமையும்)”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.

(முஅத்தா மாலிக்: 545)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

يَخْرُجُ فِيكُمْ قَوْمٌ تَحْقِرُونَ صَلَاتَكُمْ مَعَ صَلَاتِهِمْ، وَصِيَامَكُمْ مَعَ صِيَامِهِمْ، وَأَعْمَالَكُمْ مَعَ أَعْمَالِهِمْ، يَقْرَءُونَ الْقُرْآنَ، وَلَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، تَنْظُرُ فِي النَّصْلِ، فَلَا تَرَى شَيْئًا، وَتَنْظُرُ فِي الْقِدْحِ فَلَا تَرَى شَيْئًا، وَتَنْظُرُ فِي الرِّيشِ، فَلَا تَرَى شَيْئًا، وَتَتَمَارَى فِي الْفُوقِ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-545.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.