நபி(ஸல்) அவர்கள் இரவின் ஒரு பகுதியில் தொழத் தயாரானார்கள். அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமன் ஃபீஹின்ன, அன்தல் ஹக்கு, வ கவ்லுகல் ஹக்கு, வ வஹ்துகல் ஹக்கு, வலிகாஉக ஹக்குன் வல் ஜன்னத்த ஹக்கு, வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅது ஹக்குன், அல்லாஹும்ம லக்கல் ஹம்து, வபிக ஆமன்து, வஅலய்க தவக்கல்து, வஇலய்க அனய்து, வபிக காஸம்து, வஇலய்க ஹாகம்து, ஃபஹ்ஃபிர்லீ மா கத்தம்து வ அக்கர்த்து வ அஸ்ரர்து, வ அஹ்லன்து, அன்த இலாஹு லாஇலாஹ இல்லா அன்த என்று பிரார்த்திப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்;(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியை நிர்வாகம் செய்பவன். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் இவ்விரண்டிலும் உள்ளவர்கள் இறைவன் ஆவாய். நீயே உண்மையாளன். உன் வார்த்தை உண்மையானது. உன் வாக்குறுதி உண்மையானது. உன் சந்திப்பு உண்மையானது. சொர்க்கம் உண்மையாகும். நரகம் உண்மையாகும். மறுமையும் உண்மையானது. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பிக்கை கொள்கிறேன். உன் மீதே பொறுப்பேற்படுத்துகின்றேன். உன் பக்கமே திரும்புவேன். உன்னிடமே முறையிடுவேன். உன்னிடமே தீர்ப்பை எதிர்பார்க்கின்றேன். எனவே, இறைவா! என்னை நான் முன்னும், பின்னும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செய்வதவற்றை மன்னிப்பாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
(முஅத்தா மாலிக்: 574)وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ طَاوُسٍ الْيَمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ، يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ. أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ. وَلَكَ الْحَمْدُ. أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ. أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَقَوْلُكَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ. فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ. وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ. أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-574.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்