இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழை நீராலோ, ஊற்று நீராலோ, தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம் கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
விளைபொருட்களில் தரப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு எந்த அளவுள்ள விளை பொருட்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்று இப்னு உமர்(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்தாமல் போய்விட்டது. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமையாகும் என்று தெளிவுபடுத்திக் கூறுகிற அபூ ஸயீத் குத்ரீ(ரலி) அறிவிக்கிற (அடுத்து வரும் 1484-ம் எண்) ஹதீஸானது, இந்த இப்னு உமர்(ரலி) அவர்களின் (1483ம் எண்) ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது’ என்று அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்.
ஒருவர் கூறுவதை விட அதிகமான விபரத்தை நம்பகமான மற்றொருவர் கூறினால் அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும். நம்பகமானவர்களால் அறிவிக்கப்படும் தெளிவான ஹதீஸ் தெளிவற்ற ஹதீஸுக்கு (விளக்கமளித்து) தீர்மானமான ஒரு கருத்தைத் தரும்.
இதை(எதைப் போன்றதெனில்) ‘நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை’ என்ற ஃபள்லு இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸைவிட்டுவிட்டு. ‘நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்கள்’ என்று பிலால்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைப் போன்றதாகும்.
Book :24
بَابُ العُشْرِ فِيمَا يُسْقَى مِنْ مَاءِ السَّمَاءِ، وَبِالْمَاءِ الجَارِي وَلَمْ يَرَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ: «فِي العَسَلِ شَيْئًا»
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا العُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ العُشْرِ»
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «هَذَا تَفْسِيرُ الأَوَّلِ، لِأَنَّهُ لَمْ يُوَقِّتْ فِي الأَوَّلِ يَعْنِي حَدِيثَ ابْنِ عُمَرَ، وَفِيمَا سَقَتِ السَّمَاءُ العُشْرُ، وَبَيَّنَ فِي هَذَا، وَوَقَّتَ وَالزِّيَادَةُ مَقْبُولَةٌ، وَالمُفَسَّرُ يَقْضِي عَلَى المُبْهَمِ، إِذَا رَوَاهُ أَهْلُ الثَّبَتِ» كَمَا رَوَى الفَضْلُ بْنُ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُصَلِّ فِي الكَعْبَةِ» وَقَالَ بِلاَلٌ: «قَدْ صَلَّى»، فَأُخِذَ بِقَوْلِ بِلاَلٍ وَتُرِكَ قَوْلُ الفَضْلِ
சமீப விமர்சனங்கள்