தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1484

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56 (விளைபொருட்களில்) ஐந்து வஸக் அளவிற்கும் குறைவான பொருட்களில் ஸகாத் கடமையில்லை. 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(விளைபொருட்களில்) ஐந்து வஸக்குகளை விடக் குறைவானதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்களை விட குறைவாக உள்ளதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஊகியாக்களை விடக் குறைவாக உள்ள வெள்ளிக்கும் ஸகாத் கிடையாது. இதை
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

வஸக்குகளை விடக் குறைந்ததற்கு ஸகாத் இல்லை என்னும் இந்த ஹதீஸ் முன் சொன்ன ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது. ஒருவர் கூறியதை விட அதிகமான விவரத்தை நம்பகமானவர்கள் கூறினாலோ, அவர் கூறியதை அவர்கள் தெளிவு படுத்தினாலோ ஹதீஸ் கலையில் ஏற்றுக் கொள்ளப்படும் (இந்த அடிப்படையில்தான் இந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது) என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
Book : 24

(புகாரி: 1484)

بَابٌ: لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَيْسَ فِيمَا أَقَلُّ مِنْ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسَةٍ مِنَ الإِبِلِ الذَّوْدِ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسِ أَوَاقٍ مِنَ الوَرِقِ صَدَقَةٌ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: هَذَا تَفْسِيرُ الأَوَّلِ إِذَا قَالَ: «لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ» وَيُؤْخَذُ أَبَدًا فِي العِلْمِ بِمَا زَادَ أَهْلُ الثَّبَتِ أَوْ بَيَّنُوا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.