தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1489

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே வாங்கலாமா?

ஒருவருக்குப் பிறர் கொடுத்த தர்மப் பொருளை மற்றவர் விலைக்கு வாங்குவது தவறில்லை. ஏனெனில்,தர்மம் கொடுத்தவரே அப்பொருளை விலைக்கு வாங்குவதைத்தான் நபி (ஸல்) தடுத்தார்கள்;மற்றவர்களைத் தடுக்கவில்லை. 

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) இறைவழியில் ஒரு குதிரையை தர்மம் செய்தார். பின்பு அது விற்கப்படுவதைக் கண்டு அதைத் தாமே பணம் கொடுத்து வாங்கிட நினைத்தார். உடனே நபி(ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டார். அப்போது ‘நீர் தர்மம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு உமர்(ரலி) தான தர்மம் செய்த பொருளை விலைக்கு வாங்கி விட்டிருந்தால் அதை மீண்டும் தர்மம் செய்யாமல் விட மாட்டார்கள்’ என்று சாலிம்(ரஹ்) கூறினார்.
Book : 24

(புகாரி: 1489)

بَابٌ: هَلْ يَشْتَرِي الرَّجُلُ صَدَقَتَهُ؟

«وَلاَ بَأْسَ أَنْ يَشْتَرِيَ صَدَقَتَهُ غَيْرُهُ» لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا «نَهَى المُتَصَدِّقَ خَاصَّةً عَنِ الشِّرَاءِ وَلَمْ يَنْهَ غَيْرَهُ»

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

كَانَ يُحَدِّثُ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ تَصَدَّقَ بِفَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهُ، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْمَرَهُ فَقَالَ: «لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ» فَبِذَلِكَ كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «لاَ يَتْرُكُ أَنْ يَبْتَاعَ شَيْئًا تَصَدَّقَ بِهِ، إِلَّا جَعَلَهُ صَدَقَةً»





இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.