தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-7

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 4

மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது வெறுக்கத்தக்கதாகும்.

ஸல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்களிடம், “மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்துள்ளாராமே?” என்று (இணைவைப்பாளர்களால் பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது.

அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள், ‘ஆம் (உண்மைதான்); “மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும்; (மலஜலம் கழித்தபின்) வலக் கையால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்; மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்; காய்ந்த கெட்டிச் சாணம், எழும்பு ஆகியவற்றைக் கொண்டு துப்புரவு செய்ய வேண்டாமென்றும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தடை விதித்து (ஒழுங்குமுறையை கற்றுத்தந்து)ள்ளார்கள்” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 7)

4 – بَابُ كَرَاهِيَةِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ، قَالَ

قِيلَ لَهُ لَقَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ، قَالَ: أَجَلْ لَقَدْ «نَهَانَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ، وَأَنْ لَا نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، وَأَنْ لَا يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ عَظْمٍ»


Abu-Dawood-Tamil-6.
Abu-Dawood-TamilMisc-6.
Abu-Dawood-Shamila-7.
Abu-Dawood-Alamiah-6.
Abu-Dawood-JawamiulKalim-6.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.