அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சாபத்திற்குரிய மூன்று செயல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை: நீர்த்துறைகள், நடைபாதையின் நடுவில், நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மலம்-சிறுநீர் கழிப்பதாகும்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
(அபூதாவூத்: 26)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ أَبُو حَفْصٍ، وَحَدِيثُهُ أَتَمُّ أَنَّ سَعِيدَ بْنَ الْحَكَمِ، حَدَّثَهُمْ قَالَ: أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ، حَدَّثَهُ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ: الْبَرَازَ فِي الْمَوَارِدِ، وَقَارِعَةِ الطَّرِيقِ، وَالظِّلِّ
Abu-Dawood-Tamil-24.
Abu-Dawood-TamilMisc-24.
Abu-Dawood-Shamila-26.
Abu-Dawood-Alamiah-24.
Abu-Dawood-JawamiulKalim-24.
…முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக அறிவிக்கும் அபூஸயீத் அல்ஹிம்யரீ என்பார் முஆத் அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை என்று இப்னுல் கத்தான் கூறுவதாக ஹாபிள் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிடுகிறார்கள். எனவே இது முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும்…
சமீப விமர்சனங்கள்