தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1939

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1939. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

1 . ஒருவர் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது.
2 . யுத்தத்தின் போது பேசுவது.
3 . மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக பேசுவது.

அறிவிப்பவர்: (ரலி)

அஸ்மா பின்த் யஸீத் (ரலி)

أسماء بنت يزيد بن السكن

இறப்பு: ஹிஜ்ரி 63, திமிஷ்க்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அஸ்மா அல்லது ஃபுகைஹா பின்த் யஸீத்

தந்தை பெயர்: யஸீத் பின் அஸ்ஸகன்

வம்சம்: பனூ அப்துல் அஷ்ஹல்

புனைப்பெயர்: உம்மு ஆமிர், உம்மு ஸலமா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, திமிஷ்க்

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 63, திமிஷ்க்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அஸ்மா பின்த் யஸீத் ரலி அவர்கள் சிறந்த அறிவும், நாவன்மையும் கொண்ட நபித்தோழியாவார். அவர்கள் "பெண்களின் பேச்சாளர்" என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் 81 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.

மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்களுடன் சென்றார்கள். யர்மூக் போரில் கலந்துகொண்டு, தனது கூடாரத்தின் கம்பத்தால் ஒன்பது எதிரி வீரர்களைக் கொன்றார்கள். அவர்கள் திமிஷ்க் நகரில் வாழ்ந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மஹ்மூத் பின் அம்ர் பின் யஸீத் பின் அஸ்ஸகன், ஷஹ்ர் பின் ஹவ்ஷப், முஹாஜிர் பின் அபூ முஸ்லிம், இஸ்ஹாக் பின் ராஷித், முஜாஹித், அபூ ஸுஃப்யான் மவ்லா இப்னு அபீ அஹ்மத், அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் அஸ்ஸாமித்

வேறு பெயர்கள்: ஃபுகைஹா பின்த் யஸீத், உம்மு ஆமிர், உம்மு ஸலமா


ஆதாரம்: muslimscholars.info (84) · Should verify


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، وَأَبُو أَحْمَدَ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

لَا يَحِلُّ الكَذِبُ إِلَّا فِي ثَلَاثٍ: يُحَدِّثُ الرَّجُلُ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا، وَالكَذِبُ فِي الحَرْبِ، وَالكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ “

وَقَالَ مَحْمُودٌ فِي حَدِيثِهِ: «لَا يَصْلُحُ الكَذِبُ إِلَّا فِي ثَلَاثٍ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَسْمَاءَ، إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ خُثَيْمٍ، وَرَوَى دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، هَذَا الحَدِيثَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَسْمَاءَ، حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ دَاوُدَ وَفِي البَابِ عَنْ أَبِي بَكْرٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1939.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19345-ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும் சிலர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர். இவரைப்பற்றி தனியாக ஆய்வுசெய்த சிலர் இவரை சுமாரானவர் என்ற பட்டியலில் கூறுகின்றனர். இவரின் செய்திகளில் வேறு குறைகள் இல்லாவிட்டால் அது ஹஸன் தரம் என்றும் கூறுகின்றனர்…ஆய்வில்…


2 . இந்தக் கருத்தில் அஸ்மா பின்த் யஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27570, 27597, 27608, திர்மிதீ-1939,


மேலும் பார்க்க: முஸ்லிம்-5079.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.